அரசியல்

தேசிய கல்விக் கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கை.. - தமிழ்நாடு பாணியை பின்பற்றும் கர்நாடக அரசு !

தேசிய கல்விக் கொள்கையை நீக்கி அதற்கு பதில், புதிய மாநிலக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தவிருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கை.. - தமிழ்நாடு பாணியை பின்பற்றும் கர்நாடக அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தெளிவாகக் கூறிவருகிறது. மேலும் மாநிலத்திற்கு என்று தனியாகக் கல்விக்கொள்கையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கொள்கையை வடிவமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது.

தேசிய கல்விக் கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கை.. - தமிழ்நாடு பாணியை பின்பற்றும் கர்நாடக அரசு !

இந்த நிலையில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கையை நீக்கி அதற்கு பதில், புதிய மாநிலக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தவிருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்திருக்கின்றன. ஆனால் முந்தையை பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை அவசரமாக அமல்படுத்தியது.

கர்நாடக கல்வி முறை நாட்டுக்கே முன்மாதிரியாக இருப்பதால்தான் பெங்களூரு இன்றும் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக இருக்கிறது. நமது கல்வி முறையால், மாநிலத்தைச் சேர்ந்த பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல பதவியில் இருக்கிறார்கள்.

எனவே, தேசியக் கல்விக் கொள்கையை ரத்து செய்துவிட்டு, மாநிலக் கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டு வருவோம் எனத் தேர்தலில் நாங்கள் உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories