அரசியல்

”இனி­யும் பொறுத்துக் கொள்ள முடி­யாது” - தனியார் பயிற்சி மையங்களை கடுமையாக சாடிய ராஜஸ்தான் முதல்வர் !

பயிற்சி நிறுவனங்­க­ளில் சேர்வதால் இளம் மாண­வர்­கள் தற்கொலை செய்து கொள்­வதை இனி­யும் பொறுத்துக் கொள்ள முடி­யாது என ராஜஸ்தான் முதல்வர் கூறியுள்ளார்.

”இனி­யும் பொறுத்துக் கொள்ள முடி­யாது” - தனியார் பயிற்சி மையங்களை கடுமையாக சாடிய ராஜஸ்தான் முதல்வர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாகத்தில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இது தனியார் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது. இன்று கடந்த மாதம் நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து, தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

”இனி­யும் பொறுத்துக் கொள்ள முடி­யாது” - தனியார் பயிற்சி மையங்களை கடுமையாக சாடிய ராஜஸ்தான் முதல்வர் !

சில நாட்களுக்கு முன்னர் கூட JEE தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோட்டா நகரில் இந்த ஆண்டில் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் 2022ல் 15 மாணவர்களும், 2019ல் 18 பேரும், 2018ல் 20 பேரும், 2017ல் ஏழு பேரும், 2016ல் 17 பேரும், 2015ல் 18 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயிற்சி நிறுவனங்­க­ளில் சேர்வதால் மாண­வர்­கள் இரட்­டைச் சுமை சுமைக்கின்­ற­னர். இளம் மாண­வர்­கள் தற்கொலை செய்து கொள்­வதை இனி­யும் பொறுத்துக் கொள்ள முடி­யாது என ராஜஸ்தான் முதல்வர் கூறியுள்ளார். மாணவர்கள் தொடர் தற்கொலை குறித்து ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட் தலை­மை­யில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

”இனி­யும் பொறுத்துக் கொள்ள முடி­யாது” - தனியார் பயிற்சி மையங்களை கடுமையாக சாடிய ராஜஸ்தான் முதல்வர் !

இந்த கூட்டத்தில் நுழை­வுத் தேர்வு பயிற்சி மையங்­கள் தொடர்­பான தனது விமர்­ச­னத்­தை முதல்வர் அசோக் கெலாட் பதிவு செய்தார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் , “9 மற்­றும் 10ம் வகுப்பு படிக்­கும் மாணவர்­களை, நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்­க­ளில் சேர்ப்­ப­தால், அது அவர்­க­ளுக்கு கூடு­தல் சுமையை ஏற்­ப­டுத்­து­கி­றது.

போலி பயிற்சி மையங்­க­ளி­லும் சேர்ந்து மாண­வர்­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் தங்­க­ளது பள்ளிகளுக்குச்செல்­வ­தில்லை. அவர்­க­ளின் பாடங்­க­ளில் கவ­னம் செலுத்­து­வ­தற்கு பதி­லாக, நுழை­வுத் தேர்வுக்கு தயா­ராகி வரு­கின்­ற­னர். மாண­வர்­கள் இரட்­டைச் சுமையை சுமைக்கின்­ற­னர். இளம் மாண­வர்­கள் தற்கொலை செய்து கொள்­வதை இனி­யும் பொறுத் துக் கொள்ள முடி­யாது.இந்த ஆண்டு மட்­டும் கோட்டா பகு­தி­யில் தற்­கொலை செய்­து­கொண்ட 21 மாண­வர்­க­ளில் 14 பேர் குறிப்­பிட்ட கோச்­சிங் நிறு­வ­னத்­தில் படித்தவர்கள்” எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories