அரசியல்

”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!

மல்யுத்த வீரர்கள் கைது செய்ய பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!

இந்த நிலையில், நேற்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் திரண்டனர். ஆனால், இந்த போராட்டத்தின் போது மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களை தடுப்புகள் வைத்து டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.

ஆனால், மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போலிஸார் அவர்களை தாக்கி கைது செய்தனர். அதிலும், நாட்டுக்காக ஒலிம்பிக் தொடர், ஆசிய தொடர், காமன்வெல்த் தொடரில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறைதெருவில் இழுத்துச் சென்று கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!

டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?” என விமர்சித்திருந்தார்.

”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!

அதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்ப்வத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “முடிசூட்டு விழா முடிந்ததும் ஆணவம் மிகுந்த மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்” என்று விமர்சிக, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற பெண் மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.விளையாட்டில் சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்த சாம்பியன்களை கைது செய்த விதம் அருவருப்பானது, நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதுமல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் நீதி வெல்லும். “ என்று கூறியிருந்தார்.

திமுக எ,.பி கனிமொழி அவர்கள் ”நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? குற்றம்சாட்டப் பட்டிருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், நீதி கோருபவர்களை ஒடுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories