அரசியல்

ப்ளீஸ் எங்ககூட ஓட்டு கேட்க வராதீங்க : பாஜகவினரை பார்த்து கெஞ்சும் அதிமுக நிர்வாகிகள்.. இதல்லவோ கூட்டணி!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்களோடு வர வேண்டாம் என பா.ஜ.கவினருக்கு செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ப்ளீஸ் எங்ககூட ஓட்டு கேட்க வராதீங்க : பாஜகவினரை பார்த்து கெஞ்சும் அதிமுக நிர்வாகிகள்.. இதல்லவோ கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிறகு பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு பெற்றார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் தினமும் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

ப்ளீஸ் எங்ககூட ஓட்டு கேட்க வராதீங்க : பாஜகவினரை பார்த்து கெஞ்சும் அதிமுக நிர்வாகிகள்.. இதல்லவோ கூட்டணி!

தங்களை எதிர்க்கட்சியாக தாங்களே நினைத்துக் கொண்டு தினமும் ஏதாவது உளறிவரும் அண்ணாமலை போன்ற பா.ஜ.கவினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் அறிவித்தனர். ஆனால் ஏற்கனவே பலத் தேர்தல்களில் நோட்டாவோடு போட்டிப்போட்டு அசிங்கப்பட்டது போதும் என்று நினைத்து இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என ஜகா வாங்கி விட்டனர்.

இவர்கள் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.கவோ தற்போது இ.பி.எஸ். அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி என இரண்டாக உடைந்து உள்ளது. இதனால் தங்களது பலத்தைக் காட்ட இந்த தேர்தலைப் பயன்படுத்தப் போகிறோம் என ஒருவர் மாறி ஒருவர் வேட்பாளர்களை அறிவித்தனர்.

இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டி போட்டால் தங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க இருவரையும் பேசி சமாதானப்படுத்தி ஒ.பி.எஸ் அணியைத் தேர்தலிலிருந்து பின்வாங்க வைத்தது.

ப்ளீஸ் எங்ககூட ஓட்டு கேட்க வராதீங்க : பாஜகவினரை பார்த்து கெஞ்சும் அதிமுக நிர்வாகிகள்.. இதல்லவோ கூட்டணி!

பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்தாலும் அது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்காதது அவ்வப்போது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒ.பி.எஸ்-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.கவின் தலைமை கொடுக்கவில்லை. பா.ஜ.க எவ்வளவு அவமானப்படுத்தினாலும் தற்போதைய அ.தி.மு.கவின் முகமாக தான்தான் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பா.ஜ.கவிடம் எடப்பாடி பழனிசாமி ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க ஒன்றாக இருந்தாலும் இவர்கள் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இதற்குக் காரணம் பா.ஜ.கவிற்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அவப் பெயர் இருப்பதால், கிடைக்கும் வாக்குக்கூட கிடைக்காது என்பதால்தான் அ.தி.மு.க தனியாகவே பிரச்சாரம் செய்தது. இது தேர்தலின் போது நன்றாகவே பிரதிபளித்தது.

ப்ளீஸ் எங்ககூட ஓட்டு கேட்க வராதீங்க : பாஜகவினரை பார்த்து கெஞ்சும் அதிமுக நிர்வாகிகள்.. இதல்லவோ கூட்டணி!

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இடைத் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணி பா.ஜ.கவிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் தாங்களாகவே முடிவுகளை வெளியிட்டு வந்தனர்.

மேலும் கூட்டணியாகச் சேர்ந்து கூட வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இ.பி.எஸ் அணி தனியாகவேதான் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தது. இது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் வேலை பார்த்து வரும் பா.ஜ.க தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தின் போது பா.ஜ.கவினரை அ.தி.மு.கவினர் மதிக்கவே இல்லை. வெளிப்படையாகவே 'தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்க வரவேண்டாம். நீங்க வந்தா வர்ற ஓட்டும் வராமப் போய்விடும்' என பா.ஜ.கவினரிடம் கூறியுள்ளனர்.

ப்ளீஸ் எங்ககூட ஓட்டு கேட்க வராதீங்க : பாஜகவினரை பார்த்து கெஞ்சும் அதிமுக நிர்வாகிகள்.. இதல்லவோ கூட்டணி!

அதேபோல் தேர்தல் பிரச்சார பலகையில் அ.தி.மு.க நிர்வாகிகள் படங்களைத் தவிர மோடி, அமித்ஷா, நட்டா, அண்ணாமலை படங்களை முற்றிலுமாக தவிர்த்துள்ளனர். இது பா.ஜ.க-வினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாகவே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ஜ.கவினரிடம் இடைத் தேர்தலில் பிரச்சாரத்திற்கு வரவேண்டாம் என வாய் மொழியாகச் சொன்னதாக அ.தி.மு.கவிற்குள் பேச்சு அடிபடுகிறது. மேலும் அண்ணாமலை, பிரதமர் மோடி படங்களைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிக்குள்ளே இத்தனை அடிதடி சண்டைகளை வைத்துக் கொண்டுள்ள இவர்கள்தான், இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories