அரசியல்

“இத விட கோமாளித்தனம் வேறு எதுவும் கிடையாது..”- அண்ணாமலையை தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி !

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த செய்திகளையும், கேள்விகளையும் தவிர்க்குமாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

“இத விட கோமாளித்தனம் வேறு எதுவும் கிடையாது..”- அண்ணாமலையை தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த செய்திகளையும், கேள்விகளையும் தவிர்க்குமாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கிராம சபை, நகர சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களில் ஆங்காங்கே உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டது. அந்த வகையில், இன்று கோவை மாவட்டம் இராமநாதபுரத்தில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.

“இத விட கோமாளித்தனம் வேறு எதுவும் கிடையாது..”- அண்ணாமலையை தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி !

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை எதிர்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக சுமார் ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்படும். 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

“இத விட கோமாளித்தனம் வேறு எதுவும் கிடையாது..”- அண்ணாமலையை தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி !

தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, "தயவு செய்து தமிழக பாஜக தலைவர் அரசியல் கோமாளி குறித்த செய்திகளை, கேள்விகளை தவிர்க்க வேண்டும். அதாவது யாரவது சிவன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாடுவாரா.. அப்படி பட்டவ கோமாளியை உலகத்திலேயே நீங்கள் இங்கு தான் பார்க்க முடியும்.

கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் அண்ணாமலை படித்ததாக சில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதைவிட கோமாளி தனம் வேற எதுவும் உண்டா. அப்படி பட்ட கோமாளி பற்றிய கேள்விகளை தயவு செய்து கேட்க வேண்டாம்.

“இத விட கோமாளித்தனம் வேறு எதுவும் கிடையாது..”- அண்ணாமலையை தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி !

நேற்று அண்ணாமலை, செய்தியாளர்களைப் பார்த்து நீங்கள் வேண்டுமென்றால், என்னுடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணியுங்கள், தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார். அதன்பிறகும், அவர் குறித்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே? எனவே அவர் குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்றார்.

banner

Related Stories

Related Stories