அரசியல்

முகாம் இங்க இருக்கு; டாக்டரும், கருவிகளும் எங்க இருக்கு? - கேலிக்கூத்தான பாஜகவின் மோடி மருத்துவ முகாம்!

மோடி இலவச மருத்துவ முகாம் என்ற பெயரில் சென்னை தியாகராய நகரில் பாஜகவினர் நடத்தியது முகாம் மக்களிடையே முகம் சுழிப்பு மட்டுமே எஞ்சியது.

முகாம் இங்க இருக்கு; டாக்டரும்,  கருவிகளும் எங்க இருக்கு? - கேலிக்கூத்தான பாஜகவின் மோடி மருத்துவ முகாம்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தியாகராய நகர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவினர் பிரதமர் மோடி பெயரில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினர்.

குறுகிய வீட்டில் பேனர், நாற்காலி, மேஜை என அனைத்தையும் அமைத்த பாஜகவினர் மருத்துவ பரிசோதனைக்கு தேவையான எந்தவித மருத்துவ உபகரணங்களையும் இடம் பெறச் செய்யவில்லை. ஆனால் பேனரில் மட்டும் ரத்த கொதிப்பு, சர்க்கரை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முகாம் இங்க இருக்கு; டாக்டரும்,  கருவிகளும் எங்க இருக்கு? - கேலிக்கூத்தான பாஜகவின் மோடி மருத்துவ முகாம்!

மேலும், அந்த முகாமில் செவிலியர்கள், மருத்துவர்கள் என எவரையும் அமர்த்தாமல் ஏதோ ஒரு பெண்ணை டாக்டர் என நம்ப வைப்பதற்காக வெள்ளை கோட் அணிவித்து வழக்கம் போல் சுயவிளம்பரம் தேடியிருக்கிறார்கள் பாஜகவினர்.

இதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு பதில் பாஜகவை சேர்ந்தவர்களே அந்த முகாமில் குவிந்ததால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.

இப்படி இருக்கையில் இதேப்போன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மருத்துவ முகாம்களை வேறு நடத்தவிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியிருந்தார்.

banner

Related Stories

Related Stories