அரசியல்

”நாடு முழுவதும் பாஜகவினருக்கு இதே வேலைதான்” - கே.டி.ராகவனை கைது செய்ய கேட்டு DGPயிடம் ஜோதிமணி MP புகார்!

பாலியல் அத்துமீறல் தொடர்பான ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜகவின் கே.டி.ராகவனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என கரூர் எம்.பி. ஜோதிமணி காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

”நாடு முழுவதும் பாஜகவினருக்கு இதே வேலைதான்” - கே.டி.ராகவனை கைது செய்ய கேட்டு DGPயிடம் ஜோதிமணி MP புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாச வீடியோ கால் பேசும் வீடியோ வெளியானது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மதன் என்பரின் யூட்யூபில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ராகவன் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார.

இந்நிலையில் காங்கிரஸ் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராகவன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்துள்ளார். மேலும் தமிழகம் அல்லாது இந்தியா முழுவதும் பாஜக தலைவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் பாலியல் புகார் அளித்ததும், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத் தலைவர் சண்முகையா பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோவும் வெளியானதை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அவர்களின் தலைவர்களை தொடர்ந்து காப்பாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக தலைவர்களை அதிமுக அரசு காப்பாற்றி வந்ததாகவும் அதிமுக செய்யும் பொள்ளாச்சி போன்ற பாலியல் குற்றங்களை பாஜக அரசு காப்பாற்றிக் வந்ததாகவும் கூறிய ஜோதிமணி அவர்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பின் பதவியேற்ற முதல் அமைச்சர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்து உள்ளதால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஜோதிமணி புகார் அளிக்கும்போது காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை உடனிருந்தார்.

banner

Related Stories

Related Stories