தமிழ்நாடு

ஆபாச வீடியோ சர்ச்சை: பதவி விலகிய கே.டி.ராகவன் - யூடியூபர் மதன் வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன?

தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் பா.ஜ.க.,வின் பேச்சாளராக அறியப்பட்ட பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் குறித்த ஆபாச வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ சர்ச்சை: பதவி விலகிய கே.டி.ராகவன் - யூடியூபர் மதன் வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதுமே பா.ஜ.கவினர் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வரிசையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களும் பாலியல் புகார்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் மீது பாலியல் புகார் ஒன்று பூதாகரமாகியுள்ளது.

சமீபத்தில் பா.ஜ.கவில் உள்ள பெண்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பாலியல் புகாரைத் தெரிவித்தனர். இந்நிலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். அதுவும் சொந்த கட்சிக்காரர் மூலமாகவே சிக்கியுள்ளார்.

பா.ஜ.கவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் சமீபத்தில் முன்னாள் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தவர். ஆனால் இவருக்கு பெரிதாக எந்தப் பதவியும் வழங்கப்படாமல் இருந்தது.

ஆபாச வீடியோ சர்ச்சை: பதவி விலகிய கே.டி.ராகவன் - யூடியூபர் மதன் வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன?

இந்நிலையில், டி.வி விவாதங்களின் மூலம் பா.ஜ.கவின் முன்னணி நிர்வாகியாக அறியப்பட்ட பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மீது மதன் பாலியல் புகார் கூறியுள்ளார்.

பா.ஜ.கவைச் சேர்ந்த யூடியூபர் மதன், ‘மதன் டைரீஸ்’ என்ற சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், பார்ப்பதற்கு கே.டி.ராகவன் போல் இருக்கும் சட்டை அணியாத நபர் ஒருவர் பூஜை அறையில் அமர்ந்தபடி பெண் ஒருவருடன் வீடியோ கால் வாயிலாக ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அந்த வீடியோ பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார்.

ஆபாச வீடியோ சர்ச்சை: பதவி விலகிய கே.டி.ராகவன் - யூடியூபர் மதன் வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன?

இந்நிலையில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.டி.ராகவன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.

நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories