தமிழ்நாடு

ஆபாச வீடியோ சர்ச்சை... பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவிப்பு!

பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார்.

ஆபாச வீடியோ சர்ச்சை... பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க மாநிலச் செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன். ஏற்கனவே பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் உள்ள நிலையில், கே.டி.ராகவன் ஆபாச வீடியோ புகாரில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆபாச வீடியோ சர்ச்சை... பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவிப்பு!

இதுதொடர்பாக கே.டி.ராகவன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.. இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories