தமிழ்நாடு

#WhereIsArivu தெருக்குரல் அறிவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறாரா? - பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கேள்வி!

தெருக்குரல் அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

#WhereIsArivu தெருக்குரல் அறிவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறாரா? - பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ’Maajja' யூடியூப் சேனலில் வெளியானது. பாடல் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பாடலாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது வரை அந்த பாடல் யூ-ட்யூபில் 319 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பெரும் வைரலான பாடலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலின் வெற்றியில் மிக முக்கிய காரணங்களில் ஒருவர் அறிவு. அதுமட்டுமல்லாது, சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் 'நீயே ஒளி’ என்ற பாடலையும் தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச இசை இதழான Rolling Stone இந்திய பதிப்பின் ஆகஸ்ட் மத அட்டைப் படத்தில் ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் நீயே ஒளி பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

#WhereIsArivu தெருக்குரல் அறிவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறாரா? - பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கேள்வி!

இதில் பாடலாசிரியர் அறிவின் படம் இடம்பெறவில்லை. இதனால் இதுதொடர்பாக இணைய உலகில் சர்ச்சையும் விமர்சனமும் எழுந்தது. குறிப்பாக தெருக்குரல் அறிவை புறக்கணித்திருப்பது சமூக ஒடுக்குமுறையின் வெளிப்பாடே என்ற வகையில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அவரது படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தெருக்குரல் அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நீயே ஒளி பாடலை எழுதியவரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை எழுதியதுடன் பாடியவருமான தெருக்குரல் அறிவு மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே அறிவுக்கு ஆதரவாக பலரும் #WhereIsArivu என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories