அரசியல்

‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி - அதிரடி கைது

ஃபேஸ்புக்கில் தமிழன் பிரன்னாவுக்கு பதில் ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தஞ்சை பாஜக நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி -  அதிரடி கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தாமரையை மலர்ந்தே தீரும் எனக் கங்கனம் கட்டி அதிமுகவின் எலும்பில்லாத முதுகின் மீது ஏறி சவாரி செய்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் வென்றிருக்கிறது.

வெறும் 4 நான்கு இடங்களில் அதுவும் அதிமுகவின் துணையோடு வென்றுவிட்டு சுயமாக நின்று மக்களிடம் தங்களின் ஒன்றிய அரசு செய்த சாதனைகளை கூறி வாக்குப் பெற்றதாக கூப்பாடுக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்.

‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி -  அதிரடி கைது

இது ஒருபுறம் இருக்க , தஞ்சை பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் பதிவு ஒன்றினை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் அனைவருக்கும் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸின் மரண செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது.

‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி -  அதிரடி கைது

இதனையடுத்து ஆடிப்போன அந்த பாஜக இளைஞரணி நிர்வாகி தமிழன் பிரன்னாவுக்கு பதில் ஷாநவாஸ் என குறிப்பிட்டுவிட்டேன், அதேபோல கொலை மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை” என பதுங்கியிருக்கிறார்.

இந்த விவகாரம் பூதாகரமாக அந்த பாஜக நிர்வாகி மீது மாவட்ட காவல்துறை பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்து நள்ளிரவில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories