தமிழ்நாடு

BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!

காஞ்சி கேழ்வரகு மாவு மற்றும் காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றின் விற்பனையை BLINKIT விரைவு வணிக தளத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.10.2025) காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி கேழ்வரகு மாவு மற்றும் காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றின் விற்பனையை BLINKIT விரைவு வணிக தளத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள் விரைவு வணிகம் (Quick Commerce) வாயிலாக பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என அறிவித்தார்கள். 

கூட்டுறவுப் பண்டகசாலைகள், பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் நுகர்வுப் பொருட்கள் தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்து வருகின்றது.

இந்நுகர்வுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகம் செய்யும் வகையில் விரைவு வணிக முறை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்றவாறு முதற்கட்டமாக காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி பாசுமதி அரிசி (1Kg), காஞ்சி கேழ்வரகு மாவு (500g), காஞ்சி நாட்டுச் சர்க்கரை  (500g), காஞ்சி கோதுமை மாவு (500g), கம்பு மாவு (500g)  மற்றும் கடலை மாவு (250g) ஆகியவை விரைவு வணிக தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!

அதன்படி, இன்றைய தினம் (17.10.2025) முதற்கட்டமாக காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி கேழ்வரகு மாவு மற்றும் காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றின் விற்பனையை Blinkit விரைவு வணிக தளத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 

இச்சேவையினை பெற பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் Blinkit என்ற விரைவு வணிக மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் கூட்டுறவுப் பொருட்களை ஆர்டர் செய்துகொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவுப் பொருட்களை ஆர்டர் செய்ய Blinkit விரைவு வணிக தளத்தில் search–ல் கூட்டுறவுப் பொருட்களை உள்ளீடு செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

உதாரணமாக “Kanche Ragi flour” என உள்ளீடு செய்து காஞ்சி கேழ்வரகு மாவினை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், அடுத்தடுத்து பிற கூட்டுறவுப் பொருட்களும் விரைவு வணிக தளத்தில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மேற்காண்ட கூட்டுறவுத் தயாரிப்புகளை குறைந்த விலையில், தரமானதாக Blinkit விரைவு வணிக தளத்தில் தங்கள் இல்லங்களுக்கே ஆர்டர் செய்து, வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

banner

Related Stories

Related Stories