அரசியல்

முருகன் கோவிலே இல்லாத பகுதிகளில் வேல் யாத்திரை நடத்துவது ஏன்? - பாஜகவுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி!

பாஜக சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முருகன் கோவிலே இல்லாத பகுதிகளில் வேல் யாத்திரை நடத்துவது ஏன்? - பாஜகவுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி பா.ஜ. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, கோவில்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு தடை விதிப்பது தவறு எனவும் கோவிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் இது அரசியல் யாத்திரை அல்ல எனவும் தெரிவித்தார்..

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எந்த விவரமும் இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முருகன் கோவிலே இல்லாத பகுதிகளில் வேல் யாத்திரை நடத்துவது ஏன்? - பாஜகவுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி!

மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை எனக் கூறிய அவர், கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், நேற்று யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யாத்திரையில் எத்தனை பேர் பா.ஜ. தலைவருடன் செல்ல இருக்கின்றனர்? அதில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எஎனச் சுட்டிக்காட்டினர்.

மேலும், முருகன் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முழு விவரங்கள் இல்லை எனவும், கொரோனா மட்டுமல்லாமல், பருவமழையும் துவங்கியுள்ளதால் அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரையை நிறைவு செய்வதாக கூறப்பட்டுள்ளதாகவும், அந்த தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினர்.

இதையடுத்து, எத்தனை பேர் யாத்திரையில் கலந்து கொள்வர், எத்தனை பேர் 60 வயதை கடந்தவர்கள், எத்தனை வாகனங்கள் யாத்திரையில் பங்கேற்கும் என அனைத்து முழுமையான விவரங்களுடன் விரிவான விண்ணப்பம் அளிக்கப்படும் எனவும், அரசு நிபந்தனை விதித்தால் அதை மீற மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க தயார் எனவும், டிசம்பர் 6ம் தேதி தான் பிரச்னை என்றால், டிசம்பர் 5 ம் தேதி முடித்து கொள்ளவும் தயார் என பா.ஜ. தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அனைத்து விவரங்களுடன் முழுமையான விண்ணப்பத்தை அரசுக்கும், காவல் துறைக்கும் அளிக்க பா.ஜ. தரப்புக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை, நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories