தமிழ்நாடு

“வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க, தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா?” : கனிமொழி எம்.பி கேள்வி!

வேல் யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் பா.ஜ.க சார்பில், “வெற்றிவேல் யாத்திரை” என்ற பெயரில் ஒரு பயணத்தை நவம்பர் 6 ல் துவக்கி டிசம்பர் 6-ல் முடிக்கப் போவதாக அறிவித்துள்ளது. தனது அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி, வடக்கே ராமர் என கிளம்பும் பா.ஜ.க, தமிழகத்தில் முருகர் என்று கிளம்பியிருக்கிறது.

தமிழ்க் கடவுளாம் முருகரின் பெயரைச் சொல்லி, தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க-வின் யாத்திரை முடிவடையும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அந்த நாளைத் தேர்வு செய்திருப்பதிலும் உள்நோக்கம் இருக்கும் என அரசியல் கட்சியினர் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, பா.ஜ.க வட இந்தியாவில் ராமர் பெயரில் நடத்திய ரத யாத்திரை வன்முறைகளாக மாறியதோ அதேப்போன்று தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்கி வன்முறையை மாற்ற நினைக்கிறார்கள் என்றும் தேர்தல் நேரத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் மோதலை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்றும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

மேலும் கொரோனா காலத்தில், நடத்தப்பட்டும் வேல் யாத்திரைக்கு தடைவிதிக்கப்பட்டவேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க வேல் யாத்திரைத் தொடர்பாக கனிமொழி எம்.பி கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories