அரசியல்

இன்னும் எத்தனை காலம் தொண்டர்கள் காதில் பூ சுற்றுவீர்கள் ராமதாஸ் ? முரசொலி சுறுக் விமர்சனம்

இன்னும் எத்தனை காலம் தொண்டர்கள் காதில் பூ சுற்றுவீர்கள் ராமதாஸ் ? முரசொலி சுறுக் விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. அன்புமணி ராமதாசுக்காக, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பா.ம.கவை இணைத்தார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அன்புமணியாலும் வெற்றி பெற முடியவில்லை. தன் குடும்ப சுயநலத்துக்காக மருத்துவர் செய்து கொண்ட கூட்டணியை, பா.ம.க தொண்டர்களே ஏற்கவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

ஆனால், குப்புற விழுந்தாலும் ‘மீசையில் மண் ஒட்டவில்லையே’ என்ற பாணியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். அதில், “தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தியதே தவிர எனக்குள் எந்தவிதக் கவலையையோ கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதுசரி, தனது மகனுக்கு தான் மாநிலங்களவை எம்.பி சீட்டை முன்னதாகவே ‘ரிசர்வ்’ செய்து வைத்திருக்கிறாரே அவருக்கு என்ன கவலை ஏற்படுத்திவிடப்போகிறது?. சொத்து பத்துகளை விற்று தேர்தலைச் சந்தித்த பாட்டாளிச் சொந்தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி பெரிய அய்யாவுக்கு எப்படி ஏற்பட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி நாளேடு. மேலும், பல கேள்விகளை எழுப்பி முரசொலி விமர்சனம் செய்துள்ளது. அதை கீழே காணலாம்.

இன்னும் எத்தனை காலம் தொண்டர்கள் காதில் பூ சுற்றுவீர்கள் ராமதாஸ் ? முரசொலி சுறுக் விமர்சனம்
banner

Related Stories

Related Stories