அரசியல்

“வாக்காளர்களை கைவிட்டுவிட்டது தேர்தல் ஆணையம்” - இந்து என்.ராம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இரண்டாவது ஆணையர் அசோக் லவாசாவின் பரபரப்பு கடிதத்துக்கு இந்து என்.ராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“வாக்காளர்களை கைவிட்டுவிட்டது தேர்தல் ஆணையம்” - இந்து என்.ராம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி, அமித்ஷா மீதான புகார்களை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எதிராக தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அசோக் லவாசா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம், சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறது என்றும் அதில் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக உள்ளது.

மேலும், தேர்தலுக்கான கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர்களின் கருத்து மோதலால் பரபரப்பான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம், “நாட்டின் வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் மோசமான நிலையில் கைவிட்டுள்ளது என சாடியுள்ளார். மேலும், தேர்தல் ஜனநாயகம் எனும் முக்கிய தேர்வில் இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது” என்றும் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories