அரசியல்

அசோக் லவாசா புகார் மீது தக்க நடவடிக்கை தேவை : காங்கிரஸ் வேண்டுகோள்!

தலைமை தேர்தல் ஆணையர் மீதான 2வது ஆணையர் அசோக் லவாசாவின் புகார் மீது உரிய விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரப்பட்டுள்ளது.

அசோக் லவாசா புகார் மீது தக்க நடவடிக்கை தேவை : காங்கிரஸ் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி, அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பாக தனது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்யாத தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இரண்டாவது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அசோக் லவாசா முன்வைத்த குற்றச்சாட்டு மீது நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தலைமை தேர்தல் ஆணையருக்கு மோடி அளித்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் மீதான, அசோக் லவாசாவின் எதிர்ப்பு கருத்துகள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

அசோக் லவாசா புகார் மீது தக்க நடவடிக்கை தேவை : காங்கிரஸ் வேண்டுகோள்!

அசோக் லவாசாவின் கருத்துகளை பதிவு செய்யாமல், மோடி மீதும், அமித்ஷா மீதும் வைக்கப்பட்ட புகார்களை நிராகரித்து அவர்களுக்கு நன்மதிப்பை வழங்கும் செயலில் தேர்தல் ஆணையம் மூழ்கிவிட்டது என்றும் ரன்தீப் கூறியுள்ளார்.

மோடியின் அதிகார துஷ்பிரயோகத்தால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பும், மரபும் கொல்லப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் மூலம் தெளிவாகத் தெரியவருகிறது. தேர்தல் ஆணையம் எப்போதும் ஒருமித்துச் செயல்பட வேண்டுமே தவிர, பாரபட்சமாக செயல்படக் கூடாது. இது, மோடியையும், அமித்ஷாவையும் காப்பாற்றுவதற்கான முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அசோக் லவாசா புகார் கடிதம் குறித்து விளக்கம் அளித்த சுனில் அரோரா, மூவர் குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், பெரும்பான்மை முடிவு இறுதியானது என்றார். மேலும், என் மீதான புகாரில் பொது விவாதம் செய்ய தான் எப்போதும் தயார் என்று கூறிவிட்டு, தேர்தல் சமயத்தில் விவாதிக்க நேரம் இல்லை என மழுப்பலாக பதிலளித்திருக்கிறார் சுனில் அரோரா.

banner

Related Stories

Related Stories