கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த செவ்வாய் அன்று (09.04.2019) பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தார்.அப்போது, அந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெரிய பெட்டி இறக்கப்பட்டு தனியாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.
இந்த காட்சிகள் கொண்ட வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த மர்ம பெட்டியில் இருந்தது என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.