உணர்வோசை

ஜோதிடம் உண்மையா?.. அப்ப மேற்குலக ஜோதிடமும், இந்திய ஜோதிடமும் ஏன் வேறுபட்டு இருக்கு?

மேற்கத்திய ஜோதிடம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. இந்திய ஜோதிடம் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஜோதிடம் உண்மையா?.. அப்ப மேற்குலக ஜோதிடமும், இந்திய ஜோதிடமும் ஏன் வேறுபட்டு இருக்கு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மேற்கத்திய ஜோதிடம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. இந்திய ஜோதிடம் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜோதிடம் என்பது விண்வெளி நிகழ்வுகள் மனிதனின் வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கத்தை அடிப்படையாக கொண்டது.

விண்வெளியிலிருந்து பல நிகழ்வுகள் கதிர்களை (Cosmic rays) வெளியிடுகின்றன. இந்த நிகழ்வுகள் கோள்களாக இருக்கலாம். நட்சத்திரங்களாக, கருந்துளைகளாக இருக்கலாம். பூமியும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த அண்டக்கதிர்களை தம் போக்குகளால் மறிக்கும் கோள்களை வைத்து ஜோதிடப் பலன்கள் கூறப்படுகின்றன. சூரியன், சந்திரன், குரு என்றெல்லாம் ஜோதிடர்கள் பேசுவது இதனால்தான். ஒவ்வொரு கோளுக்குமான தன்மைகளை முன்னமே வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் சனி வில்லன் ஆகிறார்.

ஜோதிடம் உண்மையா?.. அப்ப மேற்குலக ஜோதிடமும், இந்திய ஜோதிடமும் ஏன் வேறுபட்டு இருக்கு?

இந்தியாவில் பிறந்த ஒருவருக்கு பிறந்த நாளின் நட்சத்திரத்தை வைத்து கோள்களை கணக்கிட்டு ஜோதிடம் கணிப்பார்கள். அவரே முப்பது வருடங்களுக்கு பிற்பாடு அமெரிக்காவில் செட்டில் ஆகிறார் என வைத்து கொள்வோம். எந்த ஜோதிடத்தை தொடர வேண்டும்? மேற்கா ‍‍‍‍‍‍ ‍‍கிழக்கா?

கிழக்கின் முதல் ராசி மேஷம், முதல் நட்சத்திரமான அஸ்வினியை வைத்து கணக்கிடப்படுகிறது. மேற்குலக ஜோதிடத்தில், பூமத்திய ரேகையை கடந்த பிறகு சூரியன் இருக்கும் திசைதான் மேஷமாக கணக்கிடப்படுகிறது. சுற்றும் கோணத்தால் ஒவ்வொரு வருடமும் 51’’ அளவுக்கு தீர்க்க ரேகையிலிருந்து பூமத்திய ரேகை பின்னால் நகர்கிறது (Precision of earth). இதனால் நம் ஜோதிடத்துக்கும் மேலைநாட்டு ஜோதிடத்துக்கும் இடையே பல வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.

ஜோதிடம் உண்மையா?.. அப்ப மேற்குலக ஜோதிடமும், இந்திய ஜோதிடமும் ஏன் வேறுபட்டு இருக்கு?

மேற்கு மேஷமும் இந்திய மேஷமும் ஒன்றாய் இருந்தது கிபி 285-ல் மட்டும்தான். அதற்கு பின் ஏற்பட்ட பூமியின் கோண நகர்வுகளால் 23 டிகிரி வித்தியாசம் தற்போதுவரை ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளை நோக்கி விமானத்தில் பறப்பவன் கடிகார நேரத்தை மாற்றி வைத்து கொள்வது போல, பூமத்தியரேகை கணக்கு கண்டு தன் ஜோதிடக் கணக்குகளையும் மாற்றி அமைத்து கொள்வானா?

அப்படியே அமைத்தாலும் மேலை நாட்டுக்கு பறந்து செல்லும் அந்த வாய்ப்பே புது ஜோதிடக் கணக்கில் இல்லாமல் போனால், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அப்படியே கடலுக்குள் விழுந்துவிடுமா? சந்தேகம்தான்.

ஜனவரி 1 என்ற காலண்டர் கணக்கு 1582ம் வருடத்திலிருந்துதான் Gregorian calendar ஆக, Julian Calendar திருத்தப்பட்ட பின் பின்பற்றப்பட்டு வருகிறது. இயேசு பிறந்தநாள் ஜூலியன் காலண்டர்படி ஜனவரி 7 ஆக இருந்து பின் க்ரெகோரியன் காலண்டர்படி டிசம்பர் 25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடவுளுக்கே இதுதான் நிலை.

ஜோதிடம் உண்மையா?.. அப்ப மேற்குலக ஜோதிடமும், இந்திய ஜோதிடமும் ஏன் வேறுபட்டு இருக்கு?

பிரபஞ்சம் மிகவும் பெரியது. அதன் ஒரு புள்ளியின் ஒரு புள்ளிதான் நம் கோள்கூட்டம். அந்த கூட்டத்தின் புள்ளிக்கும் புள்ளிதான் பூமி. அதில் நாம். இதில் ஜோதிடத்தை இணைப்பதெல்லாம் வீணர்களின் வேலை.

‍‍காலம் என்பதே மனிதனின் அறிவுக்கு மட்டும் எட்டிய அலகு. அவன் மூளைக்கேற்றார் போல் அண்டத்தை புரிந்துகொள்ள உருவாக்கி கொண்டது. அப்படியொரு போலியான அலகை கொண்டு இயற்கையின் படைப்பான மனிதனின் வாழ்க்கையை தீர்மானித்து சொல்வதாக சொல்வதெல்லாம் நகைமுரணின் நகைமுரண்!

banner

Related Stories

Related Stories