உணர்வோசை

ஊரடங்கு காலத்தில் குடிநோயாளிகளின் அவலநிலை தெரியுமா உங்களுக்கு? - அரசு செய்யத் தவறியது என்ன?

இந்த ஊர்முடக்கக் காலத்தை குடிநோய் நீக்கியல் காலமாகக்கூட பயன்படுத்தியிருக்க முடியும்; திட்டமிட்டு செயலாற்றி இருந்தால்..!

ஊரடங்கு காலத்தில் குடிநோயாளிகளின் அவலநிலை தெரியுமா உங்களுக்கு? - அரசு செய்யத் தவறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றைய காலை நிலவரப்படி, தென்காசியில் விடுமுறையில் இருந்த ஆசிரியர் ஒருவரே கள்ளச்சாராயம் காய்ச்சியதாகக் கைதுசெய்யப்பட்டுள்ள தகவல் வந்துள்ளது.

ஒரேயடியாக அதிர்ச்சி அடையவேண்டாம். ஊரடங்கு வந்ததிலிருந்தே எல்லாம் ஒரு தினுசாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது நாட்டில்... குறிப்பாக தமிழ்நாட்டில்..!

நாடடங்கு உத்தரவால், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அது நல்லதுதானே என உள்ளத்தில் உவகை பூத்தாலும், அதையொட்டி இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்ப்போமே!

ஒரே மூச்சில் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளவற்றை கவனித்தாலே, ஊரடங்குக்குப் பிந்தைய தமிழக அரசு நிர்வாகத்தின் செயல்பாடு எப்படி என்பதைக் காட்டும் ஒரு சித்திரம் நம் கண்முன்னால் வந்து நிற்கும்.

****

* மார்ச் 27 - சென்னை, கோடம்பாக்கத்தில் அமிலம் குடித்து முதியவர் (64 வயது) தற்கொலை.

* மார்ச் 31 - சென்னை, திருவொற்றியூரில் 37 வயது தொழிலாளி, மது கிடைக்காத விரக்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்திலிருந்து குதித்து உயிரிழப்பு. இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

* அதே நாள் செய்தி, நெல்லை மாவட்டம், பணகுடியில், 34 வயது தொழிலாளி (தங்கை மற்றும் வயதான தாயுடன் வசிப்பவர்), மது கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றார். சுற்றுக்காவலில் அந்த வழியாகச் சென்ற சாகுல் அமீது எனும் ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் அவரைத் தடுத்து மீட்டு, உணவு தந்து உதவிசெய்தனர்.

ஊரடங்கு காலத்தில் குடிநோயாளிகளின் அவலநிலை தெரியுமா உங்களுக்கு? - அரசு செய்யத் தவறியது என்ன?

* ஏப்ரல் 2 - புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் மது கிடைக்காமல் சவரத்துக்குப் பயன்படும் குழைவைக் (Shaving Cream) குடித்ததில் மூன்று பேர் (வயது - 33, 35, 27 )பேர் மருத்துவமனையில் இறப்பு.

அதே நாள் செய்தி, வேலூர் மாவட்டம், அரியூர், புலிமேடு மலைப்பகுதியில் பொதுமக்கள் மீது கள்ளச்சாராய கும்பல் துப்பாக்கிச் சூடு. 3 பேருக்கு குண்டு காயம்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி.

* ஏப்ரல் 6 - இரவு 8 மணிவாக்கில் சென்னையை அடுத்த ஆவடி, பட்டாபிராமில், 46 வயது தொழிலாளி, 2 பிள்ளைகளின் தந்தை, மது கிடைக்காமல் கிணற்றில் குதித்தார். தீயணைப்புப் படை வந்து நள்ளிரவு வரை முயன்று மீட்டது.

சென்னையில், நடிகை மனோரமாவின் மகன், மது கிடைக்காமல் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதால் சிக்கலாகி ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* ஏப்ரல் 7 - புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கட்டுமாவடு முக்கம் பகுதியில், குடிநோயாளியான 50 வயது லாரி ஓட்டுநர், மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை.

அதே நாளில் விழுப்புரம், ஜானகிபுரத்தில் 4 மதுக்கடைகளிலிருந்து அரசு மதுக் கிடங்குக்கு மதுக்குப்பிப் பெட்டிகளை மாற்றி அனுப்புகையில் குடிகாரர்கள் திரண்டனர். போலிஸ் தடியடி நடத்தியதில் 65 வயது முதியவர் ஒருவர் நெரிசலில் சிக்கி பலி.

* ஏப்ரல் 9 - செங்கல்பட்டு பகுதியில், மது கிடைக்காமல் வார்னிசில் எலுமிச்சைச் சாறைக் கலந்து குடித்ததில், ரயில்வே ஊழியர்கள் (34, 35 வயது மற்றும் 31 வயது), இன்னொரு ஊழியரின் மகன் மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி சாவு.

ஊரடங்கு காலத்தில் குடிநோயாளிகளின் அவலநிலை தெரியுமா உங்களுக்கு? - அரசு செய்யத் தவறியது என்ன?

* மார்ச் 24 அன்று காரைக்காலில் இருந்து நாகைக்கு 2,208 மது பாட்டில்கள், 100 லிட்டர் எரிசாராயம் கடத்தல்.

தஞ்சையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் சிக்கின.

சீர்காழியில் அரசு மதுக் கடையில் திருட்டு. 2,640 பாட்டில்களுடன் ஊழியர்கள் 5 பேர் கைது.

* நாமக்கலில் குடிநீர் ஆலையில் பதுக்கப்பட்ட 2,812 பாட்டில்கள் சிக்கின. மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனைசெய்த 38 பேர் கைது, 2,781 மதுபாட்டில்கள் கைப்பற்றல்.

* வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் கள்ளச்சாராயப் பைகள் சிக்கின.

* மார்ச் 28 - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் 1000 மதுபாட்டில்கள் சிக்கின.

* மார்ச் 29- மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் பகுதியில், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 500 அரசு மதுபாட்டில்கள் சிக்கின.

* திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் 240 அரசு மது பாட்டில்கள் கொள்ளை.

* மார்ச் 30- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 150 லி. கள்ளச்சாராயம் சிக்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் 650 மதுபாட்டில்கள் சிக்கின.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மது சட்டவிரோத விற்பனை. 3,036 மதுபாட்டில்கள் பறிமுதல்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அரசு மதுக் கடையின் பூட்டை உடைத்து 500 பாட்டில்கள் கொள்ளை.

* மார்ச் 31 - திருச்சி மாவட்டம், வரகனேரி, உறையூர் பகுதிகளில் அரசு மதுக் கடைகளில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாட்டில்கள் கொள்ளை. அதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 54 கடைகளின் சரக்குகளையும் திருச்சி தனியார் அரங்கம் ஒன்றில் ஆயுதப் பாதுகாப்புடன் குவிப்பு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தில் அரசு மதுக் கடையில் துளையிட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பாட்டில்கள் திருட்டு. 2 பேர் கைது.

* ஏப்ரல் 5 - தூத்துக்குடியில் மது பானம் விற்ற உணவக உரிமையாளரும் இன்னொருவரும் கைது. 744 பாட்டில்கள் பறிமுதல்.

* ஏப்ரல் 6 - புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் 985 மது பாட்டில்களுடன் இருவர் கைது.

*ஏப்ரல் 7 - சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அரசு மதுக் கிடங்கில் ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை.

மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகில் அரசு மதுக் கடையில் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை.

தஞ்சை, பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் அரசு மதுக் கடையில் துளையிட்டு மது கொள்ளை. சகோதரர்கள் கைது. 578 பாட்டில்கள் பறிமுதல்.

* ஏப்ரல் 10 - கோவை மாவட்டம், கணியூரில் 150 பாட்டில்களுடன் ஒருவர் கைது.

இராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை. அரசு மதுக்கடை விற்பனையாளர் உள்பட 3 பேர் கைது, 30 பாட்டில்கள், ரூ.12, 800 பறிமுதல்.

மதுரை மாவட்டம், பேரையூரில் அரசு மதுவுடன் வேறு பொருள்களைச் சேர்த்து விற்க முயன்ற 4 பேர் கைது. உருளை பேரலில் இருந்த மது அழிப்பு.

*****

ஒரு பக்கம், திடீரெனக் குடியை நிறுத்துவதால் குடிநோயாளிகளுக்கு ஏற்படுகின்ற உடல், மனத் துன்பங்கள்- தற்கொலைவரை செல்லக்கூடிய மனக்குழப்பம், மதுவேட்கை, அதைப் பெறுவதற்கு எதையும் செய்வது எனும் உச்சநிலை என கதைகதையாக விவரிக்கப்படக் கூடியவை.

”மதுவால் அழுத்திவைக்கப்பட்ட மூளையானது குடியை தற்காலிகமாக நிறுத்துவதால், முடுக்கிவிடப்படும். மூளையில் உடனடி வேதி மாற்றங்கள் அடுத்தடுத்து நடக்கும். குடிக்கும் எல்லாருக்கும் இந்தச் சிக்கல்கள் வரப்போவதில்லை. சிலருக்கு குடிக்காமல் இருக்கவே முடியாது; அதை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு கைகால் எல்லாம் பரபர என இருக்கும். அதாவது அவர்களால் குடியில்லாமல் இருக்கமுடியாது; குடிக்கு அடிமை.. குடி நோய் எனும் கட்டத்தில் இருக்கிறார்கள். அதே நேரம் இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தந்தால், சில நாள்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்புக்குள் இருந்தால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையமுடியும். மற்றவர்களைப் போல ஆகமுடியாவிட்டாலும் நிச்சயமாக முந்தைய குடிநோய் நிலையிலிருந்து படிப்படியாக விலகிவர முடியும். இதற்கு உறவினர்கள், வேண்டியவர்களின் ஒத்துழைப்பும் சிகிச்சை வசதிகளும் அவசியம்.” என்கிறார்கள், போதைநீக்கியல் வல்லுநர்கள்.

ஊரடங்கு காலத்தில் குடிநோயாளிகளின் அவலநிலை தெரியுமா உங்களுக்கு? - அரசு செய்யத் தவறியது என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏராளமான தனியார் போதைநீக்கியல் மையங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவற்றில் குறைந்தபட்சமே 10 ஆயிரம் ரூபாய் என்கிற அளவில் தொடங்கும் கட்டணம், தங்கி குணமாவதற்குள் ஓரிரு இலட்சங்களை சாப்பிட்டுவிடுகிறது. அரசுத் தரப்பிலோ இவ்வளவு செலவுக்கான தேவையே இல்லை; உரிமையாகவும் சிகிச்சையைப் பெறமுடியும் எனும் மன ஆறுதலும் பிடிமானமும் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கிறது. மாநில அளவில் பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலைமை மருத்துவமனைகளிலும் போதைநீக்கியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் இயல்பின்படியே மனநலத் துறையுடன் இணைந்ததாகவே இந்தப் பிரிவு செயல்படுகிறது; செயல்பட வேண்டும்.

போதை / குடிநீக்கியல் சிகிச்சை அளிப்பதற்கென்றே சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையிலும் காஞ்சிபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் படுக்கை வசதி கொண்ட சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டன. படிப்படியாக நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், வேலூர் ஆகிய ஊர்களிலும் இந்த மையங்களைச் செயல்படுத்தவும் அரசுத் தரப்பு முடுக்கப்பட்டது.

2018 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 6 லட்சம் பேருக்கு போதைநீக்கியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்கிறது, அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரம் ஒன்று. அதேவேளையில் அரசு மதுக்கடைகள் மூலமான வருவாயும் அதிகரித்தபடியேதான் இருக்கிறதேயொழிய, குறைந்தபாடில்லை; அது ஒரு பக்கம்!

மதுவிலக்கு கொண்டுவரப்படும்வரை மதுவை உட்கொள்ளும் மனிதர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் கடமை அல்லவா? குடிமகன் என்கிற அடிப்படையில் பார்த்தாலும், குடிகாரர்/குடிநோயாளி எனப் பார்த்தாலும் லட்சக்கணக்கான மனிதர்கள் என்பதுடன் மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களும்தானே எந்த பாதிப்பையும் எதிர்கொள்ள வேண்டும்!

சில வல்லுநர்கள் ஒருபடி மேலே போய், இந்த ஊர்முடக்கக் காலத்தை குடிநோய் நீக்கியல் காலமாகக்கூட பயன்படுத்தியிருக்க முடியும்; திட்டமிட்டு செயலாற்றி இருந்தால் என்கிறார்கள். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தற்காலிகமாகக் குடியை நிறுத்துவதால் ஏற்படும் துன்பங்களைக் கட்டுப்படுத்தி, படிப்படியாகக் குடிநோயின் வீரியத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பது குடியற்ற சமூகத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்பு.

இருக்கின்ற பொது மருத்துவக் கட்டமைப்புகளின் மூலம் இந்த மூன்று வாரமும் போதை நீக்கியல் செயல்பாடுகள் நடந்திருக்கின்றனவா என்பது விடை அளிக்கப்படாத பெரும் கேள்வியாகவே எஞ்சுகிறது.

எந்தெந்த தெரு முனை, சந்து, காடுகளில் எல்லாம் மது கிடைக்கும் என அறியப்படும் அளவுக்கு, குடிநீக்கியல் மருத்துவ வசதிகள், அவை கிடைக்கும் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களைப் பற்றி அவர்களுக்கு அரசாங்கம் தெரியப்படுத்தி இருக்கிறதா என்றால் சாதகமான பதில் ஒன்றும் கிடைக்கவில்ல.

banner

Related Stories

Related Stories