முரசொலி தலையங்கம்

“தூயசக்தி விஜய் காலைச் சுற்றும் சொத்து வழக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

சொத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற பலரது வெற்றிகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

“தூயசக்தி விஜய் காலைச் சுற்றும் சொத்து வழக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (10-10-2026)

விஜய் காலைச் சுற்றும் சொத்து வழக்கு!

தூயசக்தி விஜய் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? தனது சொத்துக் கணக்கை பல்வேறு தவறுகளுடன் காட்டி இருக்கிறார். மறைத்திருக்கிறார்.

இவ்வளவையும் செய்து விட்டு நீதிமன்றத்தில் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? ‘’வேட்புமனுவில் எந்தத் தகவலையும் மறைக்க வில்லை. அனைத்து விபரங்களையும் 99 விழுக்காடு வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளேன். ஒரு சில தவறுகள் இருக்கலாம். அதற்காக வேட்புமனுவை ஏற்றதே தவறு என்று சொல்ல முடியாது.” என்று விஜய் தரப்பு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார்.

99 விழுக்காடு அனைத்து விபரங்களையும் சொல்லி விட்டாராம். ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்துக் கணக்கில் 99 விழுக்காடு சொன்னால் போதும் என்று சொல்கிறதா சட்டம்? இப்படிச் சொல்வதற்கு கூச்சமே இல்லையா?

‘ஒரு சில தவறுகள் இருக்கலாம்’ என்றும் விஜய் தரப்பு வாதிட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால், ‘திருவிளையாடல்’ படத்தில் தருமி சொல்வாரே, ‘பாட்டில் எவ்வளவு தவறுகள் இருக்கிறதோ, அதற்கான மதிப்பைக் குறைத்துக் கொண்டு பரிசுப் பொருளைக் கொடுங்களேன்’ என்று சொல்வதைப் போல இருக்கிறது. இது என்ன படமா?

‘ஒரு சில தவறுகள் இருக்கலாம்’ என்று சொன்னால் என்ன பொருள்? அப்படியானால், தவறுகள் இருப்பதை, சொத்துக்களைத் திருத்தியதில், திரித்ததில், மறைத்ததில் உண்மை இருக்கிறது என்பதை விஜய் ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.

முதலமைச்சர் விஜய் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூர் வாக்காளர் தினேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில்..

1. விஜய் தனது வேட்புமனுவில் கொடைக்கானல் வில்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனது நிலம் எனச் சொல்லி இருக்கிறார். அரசுப் பதிவேட்டில் அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலமாகவே இன்னமும் இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு அதனை 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்வது தவறான தகவல் ஆகும்.

2. சென்னை நீலாங்கரையில் உள்ள வீடு தனக்கு வாரிசுரிமை வாயிலாக பெறப்பட்டதாக விஜய் சொல்கிறார். ஆனால் அந்தச் சொத்து 2005 ஆம் ஆண்டு அவரது தந்தை சந்திரசேகர் பதிவு செய்து கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக பெறப்பட்டது ஆகும். இதுவும் தவறான தகவல்.

3. நீலாங்கரை வீடு 17,100 சதுர அடி நிலம் மற்றும் 5,500 சதுர அடி கொண்ட அந்த வீட்டின் மதிப்பு ரூ.2.75 கோடி என்று பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் விஜய் தனது வேட்புமனுவில் 18,633 சதுர அடியில் கட்டுமானம் கட்ட 18.73 கோடி ரூபாயைச் செலவிட்டு உள்ளதாகவும், தற்போது அதன் மதிப்பு ரூ.20 கோடி என்றும் சொல்லி இருக்கிறார்.

4. கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை போரூரில் 34,000 சதுர அடி கொண்ட விவசாய நிலத்தை 91.13 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறியுள்ளார். ஆனால் பதிவுத்துறை ஆவணங்களின் படி 7.5 கோடி ரூபாய்க்கு 20,773 சதுர அடி நிலம் மட்டுமே வாங்கி இருக்கிறார்.

5. சென்னை பாடியில் 23,460 சதுர அடி வணிக வளாகத்தை ரூ.35 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் விஜய். ஆனால் இந்த சொத்து ரூ.7 கோடிக்கு விற்கப்பட்டதாக அதன் மதிப்பை குறைத்துக் காட்டி இருக்கிறார்.

6. பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்தை விஜய் தனது வேட்புமனுவில் மறைத்துள்ளார்.

“தூயசக்தி விஜய் காலைச் சுற்றும் சொத்து வழக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

– இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் விஜய் மீது வைக்கப்பட்டுள்ளன. சொத்துக்களை மறைத்தும், மதிப்பைக் குறைத்தும் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதால் பெரம்பூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேட்பாளர் வேட்புமனுவில் தவறான தகவலை அளிக்கவோ, தகவலை மறைக்கவோ கூடாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். இதைத்தான் வாக்காளர் தினேஷ் தரப்பு குற்றச்சாட்டாக வைக்கிறது. இதற்கு பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் தினேஷ் தரப்பு வழக்கறிஞர் வைத்துள்ளார்.

“எந்த ஒரு தவறான தகவலும், முழுமையான தகவலும், போலியான தகவலும், ஒரு பக்க சார்புடைய தகவலும், தவறான முடிவுக்கு இட்டுச்செல்லும் தகவலும்.... சுதந்திரமாக வாக்கு செலுத்துவதற்கு வாக்காளருக்கு இருக்கும் உரிமையில் நிச்சயமாகக் குறுக்கிடும்... யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்கிற அவருடைய தெரிவையும் பெருமளவில் முடிவு செய்யும்.” – என்று 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் தீர்ப்பு அளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அதே உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டும் உறுதி செய்திருக்கிறது.

இந்த வாதங்களை வைத்ததும் நீதிபதி லட்சுமி நாராயணன், முதலமைச்சர் விஜயின் வழக்குரைஞர் பக்கம் திரும்பி, “வழக்கின் தன்மை முற்றிலுமாக மாறிவிட்டது. நீதிபதி ராமசுப்ரமணியன் அளித்திருக்கும் தீர்ப்பைப் பாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார். இந்த வழக்கில் அக்டோபர் 14ஆம் தேதி தீர்ப்பு தர இருக்கிறது நீதிமன்றம்.

இந்த வழக்கில் வரப்போகும் தீர்ப்பும், ஒருவேளை வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனாலோ அது விஜய் பதவியைப் பறிக்கும் வகையில் ஆகலாம். சொத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற பலரது வெற்றிகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் கிசான் சங்கர் கதோரே, தெலுங்கானாவில் வனமா வெங்கடேஸ்வர ராவ், கர்நாடகாவில் எஸ்.என்.சுப்பாரெட்டி ஆகியோர் “சொத்தை மறைத்த காரணத்தால் வெற்றி செல்லாது” என்று அறிவிக்கப்பட்டு பதவி இழந்தவர்கள் ஆவார்கள். அந்த வரிசையில் விஜய் காலை, சொத்து வழக்கு சுற்றி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories