முரசொலி தலையங்கம்

“SIR மோசடியானவை அதன் மூலம் நடந்த தேர்தல்களும் மோசடியானவையே” : முரசொலி!

20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 66 இடங்களில் 32 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.

“SIR  மோசடியானவை அதன் மூலம் நடந்த தேர்தல்களும் மோசடியானவையே” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (07-10-2026)

தேர்தல் சதிகளும் சந்தேகத்துக்குரிய முடிவுகளும்!

"SIR நடவடிக்கைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து முதலமைச்சர்களும் சட்டவிரோதமானவர்கள்” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சொல்லி இருக்கிறார்.

“வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் திருத்தம் என்ற பெயரால் செய்யப்பட்ட SIR நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகத்தைக் குலைக்க நடத்தப்பட்டவை. அதேபோல் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது நடந்து முடிந்த அனைத்துத் தேர்தல்களும் சட்டவிரோதமானவை. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளைக் கலைக்க வேண்டும்”என்றும் மல்லிகார்ஜுன கார்க்கே சொல்லி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரே சொன்னார்:"மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்”என்று!

இந்திய ஜனநாயகத் தேர்தல் முறையின் இருண்ட பக்கங்களை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் முகம் காட்டு கிறது. தன்னோடு பணியாற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கே தெரியாமல் ஞானேஷ்குமார் தன் விருப்பத்துக்கு பல்வேறு சதிச்செயல்களைப் புகுத்தி தேர்தல் முறையைக் கையாண்டு வந்துள்ளார் என்பது தினந்தோறும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது.

பத்து மாதத்தில் 14 முறை தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாருக்கு நாங்கள் சொல்லிய ஆலோசனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன என்று மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

“நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரிய- வில்லை. சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்- களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை. அதைச் செய்வதற்கான ERONet வலைதளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. எங்களால் கூட அதனை அணுக முடியவில்லை”என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், ஞானேஷ்குமார் காலத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் எப்படி ஜனநாயகத் தேர்தல்களாக இருந்திருக்க முடியும்? இவை எதற்கும் ஞானேஷ்குமாரால் முறையான பதிலைச் சொல்ல முடியவில்லை.

ஞானேஷ்குமாரை பதவி விலகச் சொல்லி நாளுக்கு நாள் போராட்டம் அதிகம் ஆகி வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள். ‘நீட்' தேர்வுக்கு எதிராகப் போராடி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி களத்தில் குதித்துள்ளது. இடதுசாரி மாணவர்கள் இந்தியா முழுவதும் இதே போன்ற போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.

“SIR  மோசடியானவை அதன் மூலம் நடந்த தேர்தல்களும் மோசடியானவையே” : முரசொலி!

இந்த நிலையில் ‘பிசினஸ் லைன்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் செய்யப்பட்ட SIR நடவடிக்கைகள்தான் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை மாற்றியது என்கிறது அந்தப் பத்திரிகை.

SIR மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட தொகுதி களில்தான் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறது. குறைந்த அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தி.மு.க.வும், அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகளவில் த.வெ.க.வும் வெற்றி பெற்றுள்ளது என்கிறது இப்பத்திரிகை.

80 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்ட 18 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளதாகவும், 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் 18 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளதாகவும் சொல்கிறது. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 37 இடங்களில் 24 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.

20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 66 இடங்களில் 32 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.

அதாவது SIR நடவடிக்கைகள்தான் தேர்தல் முடிவுகளை மாற்றி இருக்கிறது என்று சொல்கிறது 'பிசினஸ் லைன்’.

10 ஆயிரத்துக்கும் குறைவாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 19 தொகுதி களில் இரண்டில் மட்டுமே த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது, SIR மூலம் அதிகளவில் வாக்காளர்கள்நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

SIR பணிகளுக்குப் பிறகு தேர்தலை எதிர்கொண்ட மாநிலங்களில் முடிவுகள் சந்தேகத்தை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளதைத் தான் தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் உறுதி செய்து வருகின்றன. கார்கே, உத்தவ் தாக்கரே சொல்வது சரியானதே!

வாக்காளர் பட்டியல் முறைகேடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என இரண்டு விதமான முறைகேடுகள் நடந்துள்ளன. SIR மூலம்தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களே மோசடியானவை. அதனடிப்படை- யில்நடந்த தேர்தல்களும் மோசடியானவையே!

banner

Related Stories

Related Stories