முரசொலி தலையங்கம்

முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!

“சொன்ன பொய்யை தானே மறுக்கும் பொய்யர்கள்!” எனத் தலைப்பிட்டு த.வெ.க.வின் இரட்டை வேடத்தை விமர்சித்த முரசொலி தலையங்கம்!

முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தேர்தலுக்கு முன்னதாக என்ன பேசினார் விஜய்? ‘மாநிலத்தையே கடனாளி ஆக்கிவிட்டது தி.மு.க.’ என்று சொன்னார். ‘தமிழ்நாடே நிதி நெருக்கடியில் இருக்கிறது’ என்றார். ‘கஜானா காலி' என்றார். ‘எல்லாவற்றையும் துடைத்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள்’ என்றார்.

‘ஊரான் வீட்டு நெய்யில் அவர்கள் குடும்பத்துக்கு ஸ்வீட் செய்துவிட்டார்கள்’ என்றார். ‘தனி கமிஷன் வாங்குவதை நிறுத்தினாலே எதற்கும் கடன் வாங்கத் தேவையில்லை’ என்றார். இப்படி பேசிய எதற்கும் அவருக்குப் பொருள் தெரியவில்லை. அந்த வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து அவர் பேசவில்லை என்று இப்போது உணர முடிகிறது.

முதலமைச்சராக வந்த விஜய், இந்த மூன்று மாதங்களாக என்ன செய்கிறார்? இதுவரை தான் பேசியது அனைத்தும் பொய்தான் என்பதை அவரே நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். அதாவது "தான் ஒரு மகா மகா பொய்யர்" என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

முதலமைச்சராக வந்த விஜய், இந்த மூன்று மாதமாக என்ன செய்கிறார்? கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறார். அது ஒன்றைத்தான் செய்கிறார். கடன் வாங்கி மக்களுக்கு ஏதாவது நலத் திட்டம் உருவாக்கப் போகிறாரா? அதற்கான அறிவிப்பை விட்டாரா என்றால் இல்லை. மாறாக, எம்.எல்.ஏ. ஆகி இருக்கும் அவர்களது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு கார் கொடுக்கப் போகிறார். அதாவது அரசாங்க நெய்யில் ரசிகர் மன்றத்து ஆட்களுக்கு ஸ்வீட் செய்து தரப்போகிறார்.

இவர்களில் பலருக்கும் கார் இருக்கிறது. ஆனாலும் கார் கொடுக்கப் போகிறாராம். அந்தக் காரைப் பராமரிக்க 75 ஆயிரமாம். உதவி யாளருக்கு 25 ஆயிரமாம். இப்படி காருடன் சேர்ந்து ஒரு லட்சம் தரப்போகிறார். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தரப்படும் சம்பளம், வசதிகளோடு சேர்த்து கூடுதலாக இவை கிடைக்கப் போகிறது.

முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!

தனது கட்சி ஆட்களுக்குக் கொடுக்கவேண்டுமானால், அவர் கட்சிசார்பில் கொடுக்கலாம். அரசாங்கப் பணத்தை எதற்காக எடுக்க வேண்டும்? விஜய்யின் கொடையுள்ளம் ஊர் அறிந்தது ஆகும். (அதை பின்னர் பேசுவோம்)

நிதி நெருக்கடி நேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு காரும், மாதம் ஒரு லட்சமும் தேவையா? என்று, போராடும் விவசாயிகள் கேட்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் கேட்கிறார்கள். இவர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டிருக்கிறது விஜய் சர்க்கார்.

“கடுமையான நிதி நெருக்கடி இருப்பதால் தி.மு.க. உறுப்பினர்கள் 59 பேருக்கும் கார் தேவையில்லை. எங்கள் தலைவர் ஆலோசனைப்படிஎங்களுக்கு கார் வேண்டாம்" என்று கம்பீரமாக அறிவித்தார் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி அவர்கள். இது த.வெ.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. 'ஐந்தாண்டுகள் கழித்து திரும்ப வாங்கிக் கொள்வோம்' என்று சமாளிக்கிறார்கள். ஐந்தாண்டு கழித்து அந்தக் காருக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது? த. வெ.க.வுக்கு இருக்கும் மதிப்பைப்போலக் குறைவாகத்தான் இருக்கப் போகிறது.

தங்களுக்கு வாகனம் இருப்பதாக 190 பேர் வேட்புமனுவில் சொல்லிஇருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வாகனம் எதற்காக அரசு சார்பில்வழங்க வேண்டும்?

த.வெ.க.வில் வெற்றி பெற்று வந்திருப்பவர்களில் பலரும் கோடீஸ்வரர்கள். அந்தளவுக்கு சொத்துக் கணக்கு காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக அரசு சார்பில் கார் வழங்க வேண்டும்?

கார் வேண்டும் என்று கேட்டவரிடமும் கார் இருக்கிறது. கார் கொடுத்ததை வரவேற்றவரிடமும் கார் இருக்கிறது. பிறகு ஏன் அவர்களுக்கு அரசின் சார்பில் கார் வழங்க வேண்டும்?

முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!

சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு சந்தித்துள்ளது. “முதலமைச்சர் ஆனாலும் தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை இதிலிருந்து சொல்லி விட்டார் விஜய். அவரது அவசரத்தை இதன்மூலம் உணர முடிகிறது.

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, த.வெ.க. சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், விஜய் அவர்கள் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாம், அதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், மாறாக பாராட்டுவார்கள்.

தமிழக நிதிநிலை படு மோசமாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டு விட்டு, இப்படி மக்கள் வரிப்பணத்தை, அரசு நிதியை கார் வாங்கப் பயன்படுத்துவது ஆணவத்தின் உச்சம், அறியாமையின் வெளிப்பாடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் இந்த கையாலாகாத அரசுக்கு இந்தத் திட்டத்திற்கு மட்டும் எங்கிருந்து பணம் வரும்..?” என்று ஒவ்வொருவரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

“மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்குவது எந்த வகையில் நியாயம்? கார் இல்லாத உறுப்பினர்களுக்கு மட்டும் சலுகை வழங்கியிருக்கலாமே, அல்லது கட்சி நிதியில் இருந்து கார் வசதியைச் செய்திருக்கலாமே.. எம்.எல். ஏ.க்களின் வசதிக்காக அரசு கஜானாவைப் பயன்படுத்துவது நியாயமில்லை” என்ற விமர்சனமும் சமூக வலைதளத்தில் வலுத்து வருகிறது.

எதையும் சரியாகக் கணிக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி இருக்கிறார்: ‘தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக கார் கொடுக்கிறார் விஜய்’ என்கிறார். அதுதான் உண்மை!

banner

Related Stories

Related Stories