முரசொலி தலையங்கம்

“தன்னம்பிக்கையை விதைத்த திட்டத்தின் பெயரை மாற்றிய தற்குறி அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

“அவர் முதல்வர் அல்ல!” தலைப்பிட்டு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்த முரசொலி தலையங்கம்!

“தன்னம்பிக்கையை விதைத்த திட்டத்தின் பெயரை மாற்றிய தற்குறி அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஐந்தாண்டு காலத்தில் அரைகோடி மாணவ, மாணவியரை அனைத்துத் துறையிலும் தகுதி படைத்தவர்களாக உயர்த்திய மாபெரும் திட்டம் தான் - மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சி காலத்தில் உருவாக்கிய ‘நான் முதல்வன்' திட்டம் ஆகும். அவரது கனவுத் திட்டம் அது. அத்தகைய மகத்தான திட்டத்தின் பெயரை ‘TN SKILL CORPORATION’ என பெயர் மாற்றி இருக்கிறது தற்குறி அரசு.

இதுவரை ‘தற்குறிகள்’ என்று சொல்வதற்கான முழுமையான பொருத்தத்தை இப்போது தான் அடைகிறார்கள்!

‘நான் முதல்வன்’ என்று சொல்லிப் பாருங்கள். “TN SKILL CORPORATION” என்று சொல்லிப் பாருங்கள். எந்தச் சொல் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும், வெற்றிக்கான உணர்ச்சியையும் கொடுக்கும்? ‘நான் முதல்வன்‘ என்ற சொல்லை உச்சரிப்ப வர் எவராக இருந்தாலும் அவர்கள் அனைவருமே தங்களது துறையில் ‘நான் முதல்வன்’ என்ற உணர்ச்சியையும், உந்துதலையும் பெறுவார்கள். அதனால் தான் அந்தப் பெயரைச் சூட்டினார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

என்னரும் தமிழ்நாட்டின் கண்

எல்லோரும் கல்வி கற்றுப்

பண்ணரும் கலை ஞானத்தால்

பராக்கிரமத்தால் அன்பால்

உன்னத இமய மலை போல்

ஓங்கிடும் கீர்த்தி எய்தி

இன்புற்றார் என்று மற்றோர்

இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?

- என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஏக்கத்துடன் பாடினார். அத்தகைய ஏக்கம் போக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம் அது.

“தன்னம்பிக்கையை விதைத்த திட்டத்தின் பெயரை மாற்றிய தற்குறி அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

"எனது தந்தை பேருந்து நடந்துநர். எனது அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. நான் இன்று ஐ.பி.எஸ். ஆகி இருக்கிறேன். நான்கு ஆண்டுக ளுக்கு முன் இதே போன்ற ஒரு மேடையில் உங்களைப் போன்று கூட்டத்தோடு கூட்டமாக பின்புறம் உட்கார்ந்து இருந்தேன். இன்று ஐ.பி.எஸ். ஆகிவிட்டேன். அரசின் திட்டத்தால் தான் இது சாத்தியம். என்னைப் போல நீங்களும் ஆகலாம்" என்று ஐ.பி.எஸ். ஆன மாணவி ஒருவர் பேசினார். இதுதான் 'நான் முதல்வன்' திட்டத்தின் மகத்தான வெற்றி ஆகும்.

'நான் முதல்வன்' திட்டத்தால் பலன் பெற்று ஐ.ஏ.எஸ்.ஆன அதிகாரி ஆன ஒரு மாணவன், “எனக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் மூல மாக கிடைத்த ரூ.1.15 லட்சம் தான் பெரும் உதவியாக இருந்தது. அதனை வைத்துத்தான் படித்தேன்” என்றார். இதுதான் நான் முதல்வன்' திட்டத்தின் மாபெரும் வெற்றி ஆகும்.

'நான் மட்டும் முதல்வர் அல்ல, நீங்கள் அனைவரும் முதல்வன் தான்' என்று சொல்லி இத்திட்டத்துக்கு, 'நான் முதல்வன்' திட்டம் என்று பெயர் சூட்டினார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ஐந்தாண்டு காலத்தில் 50 லட்சம் இளைஞர்கள் இதற்கான பயிற்சியைப் பெற்று நல்லபல பணிகளில் சேர்ந்துள்ளார்கள்.

*நிறுவனங்களை உருவாக்கத் தயாராக இருக்கிறோம். அதற்குத் தகுதி வாய்ந்த திறமைசாலிகளை உருவாக்கிக் கொடுங்கள்" என்று பல்வேறு நிறுவனங்கள் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சொல்லி, அதற்காக அவர் உருவாக்கிய திட்டம் தான் 'நான் முதல்வன்'. 'நமக்கெல்லாம் பெரிய கம்பெனியில் வேலை கிடைக்குமா?' என்று ஏங்கிய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை விதைத்த திட்டம் அது.

அந்த திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் TN SKILL. CORPORATION' என்று பெயர் சூட்டி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். சிலருக்கு தானும் செய்யத் தெரியாது. அடுத்தவர் செய்ததையும் கெடுப்பார்கள். அத்தகைய ரகம் விஜய். ஒரு நல்ல திட்டத்தின் நோக் கத்தைச் சிதைத்து, அதனை ஒரு பயிற்சியைப் போல சிதைத்து விட்டார் விஜய். அவரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

“தன்னம்பிக்கையை விதைத்த திட்டத்தின் பெயரை மாற்றிய தற்குறி அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் 'TN SKILL. CORPORATION என்று பெயரை மாற்றிய முதலமைச்சர் விஜய், அத்திட்டம் தொடர்பான அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார்கள். வீடியோ பதிவுகளை நீக்கி இருக்கிறார்கள். மே 15 ஆம் தேதியில் இருந்தே பதிவுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. 'நான் முதல்வன்' என்ற சொல்லை அகராதியில் இருந்து இந்த ஆணவம் பிடித்தவர்களால் நீக்க முடியாது. இத்திட்டத்தால் பலன் பெற்றவர்களின் அறிவுத் திறனை செயலற்றதாக ஆக்க முடியாது. நான் முதல் வன்' திட்டத்தால் பணி பெற்றவர்களின் பணியை பறிக்க முடியாது. 'நான் முதல்வன்' திட்டத்தால் தன்னம்பிக்கையையும் துணிச்ச வையும் பெற்றவர்களின் துணிச்சலைப் போக்க முடியாது.

பெயரை நீக்குவதால் பெரிய ஆளாக ஆகிவிட முடியாது விஜய். ‘நான் முதல்வன்’ என்று சொல்லும் போதே ‘மு.க.ஸ்டாலின்’ பெயர் தான் விஜய்க்கு நினைவுக்கு வருகிறது என்றால் இத்திட்டத்தின் அடித்தளம், விதை அவர் போட்டது ஆகும். எத்தனையோ திட்டங்கள் வரும். போகும். ஆனால் மக்கள் மனதில் நின்றவை சில தான். அத்தகைய திட்டங்களில் ஒன்று ‘நான் முதல்வன்’ ஆகும்.

2021 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 'நான் முதல்வன்' திட்ட பயிற்சிகளின் மூலமாக கடந்த ஆண்டு 57 பேர் தேர்வு ஆனார்கள். அது 'நான் முதல்வன்' திட்டத்தின் மகத்தான சாதனை ஆகும். இது போன்ற ஒரு திட்டத்தை சிந்திக்கத் தெரியாமல் சிதைக்கும் வகையில் பெயரை மாற்றி இருக்கிறார் விஜய்.

பிரதமர் மோடிக்கு கொடுத்த கடிதத்தில், ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில் துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் "இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை" (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் விஜய். இதுதான் 'நான் முதல் வன்' திட்டம் ஆகும். அதாவது 'நான் முதல்வன்' என்ற ஸ்டிக்கரை கிழித்து விட்டு புது ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார் விஜய். தன்னால் புதி தாக எதுவும் கிழிக்க முடியாது என்று விஜய்க்குத் தெரியும்.

‘TN SKILL CORPORATION' என்று மாணவர்களிடம் சொன்னாலும், ‘பழைய நான் முதல்வன் ஸ்கீம் தான்’ என்று மாணவ, மாணவியர் சொல்வார்கள். அப்படி உச்சரிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினே!

banner

Related Stories

Related Stories