முரசொலி தலையங்கம்

”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!

தவெக ஆட்சியமைந்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 20 நாட்களில் தொடரும் குற்றச்சம்பவங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

இருபதே நாளில் இருண்ட காலத்தை தமிழ்நாட்டு மக்களுக்குக் காட்டி விட்டார் முதலமைச்சர் விஜய். சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது சட்டம் ஒழுங்கு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு. மின்சாரம் இல்லாத வாழ்க்கைக்கு மக்களை பக்குவப்படுத்தி வருகிறார் விஜய். பேருந்துகள் இல்லாமல் அனைத்து பகுதியிலும் மக்கள் தொல்லைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். விவசாயப் பெருமக்கள் அனைத்து ஊர்களிலும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது என்பது மிகப்பெரிய நாடகம் என்பதை மக்கள் போராட்டங்கள் காட்டுகிறது. 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' என்று பாட்டுப்பாடியவர் ஆட்சியில் 20 ரூபாய் வசூல் நடக்கிறது. ஆய்வு என்ற பெயரால் அவஸ்தையைக் கொடுத்து வருகிறார்கள் அமைச்சர்கள்.

த.வெ.க.வினர் ரீல்ஸ் எடுக்கும் இடமாக அரசு அலுவலகங்களை மாற்றி விட்டார்கள். மணல் கொள்ளை லாரிகள் மக்களால்

சிறைப்பிடிக்கப்படுகிறது. நெல் கொள்முதல் செய்ய அதிக பணம் வசூலிப்பதாக பல்வேறு இடங்களில் புகார்கள் வந்துள்ளது.

இந்த வரிசையில் வன்முறை வெறியாட்டம் மாநிலம் முழுக்க நடந்து கொண்டு இருக்கிறது.

*கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி உயிரோடு இருப்பதாக முதலில் சொல்லிவிட்டு, பிணமாகக் கொடுத்துள்ளது போலீஸ். அம்மாவுக்குத் தெரியாமல் சிறுமியின் உடலை எடுத்துச் சென்றுள்ளார்கள். அவசர அவசரமாக எரித்துள்ளார்கள்.

*ராமநாதபுரத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த வினோத் என்பவரை போலீஸ் அதிகாரியே மிரட்டி இருக்கிறார். வினோத் வீட்டில் குட்கா இருப்பதாகச் சொல்லி சோதனை நடத்தி இருக்கிறது போலீஸ்.

*காங்கேயத்தில் கஞ்சா ஆசாமிகள் சாலையில் அட்டகாசம் செய்ய அவர்களை அடக்க முடியாமல் போலீஸ்காரர்களே ஓட்டம் பிடித்தார்கள்.

*சென்னை ஓட்டேரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்.

*சென்னை புழல் பகுதியில் 3 கிலோ கஞ்சா, குட்கா, ஹான்ஸ் பறிமுதல்.

*சேலம் சீலநாயக்கன்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 54 சவரன் கொள்ளை.

*நெல்லையில் பேராசிரியர் ஒருவர் வீட்டில் கொள்ளை.

*திருவள்ளூரில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

*கும்பகோணத்தில் பேனர் வைத்த த.வெ.க.வினரைத் தட்டிக் கேட்ட போலீஸார் கையை உடைத்துள்ளார்கள் அக்கட்சியினர்.

”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!

*த.வெ.க. கொடியுடன் வந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தை தாக்கி இருக்கிறார்கள்.

*வேலூரில் செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்ட த.வெ.க. ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து சாலை மறியல்.

*மதுராந்தகத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த த.வெ.க. நிர்வாகி.

*அமைச்சர் தென்னரசு பேரைச் சொல்லி வீடு வாங்கித் தருவதாக பணம் வசூலித்த த.வெ.க. பெண் நிர்வாகியைக் கண்டித்து முதியவர் ஒருவர் தற்கொலை.

*சென்னையில் 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை செய்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

*மதுரையில் பூட்டை உடைத்து 100 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

*திருநின்றவூரில் தலைமைக் காவலர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி 5 வயது சிறுமி பலியாகி இருக்கிறார்.

*ஈரோடு கல்லூரி அருகே 3 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

*கடலூரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதைக்கப் பட்டார்.

*திருவாரூரில் பூட்டிய வீடு உடைக்கப்பட்டு 13 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

*தூத்துக்குடியில் மது போதை தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை.

*நிலக்கோட்டையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர்.

*காட்பாடியில் அரசு பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு 18 மடிகணினிகள் திருடப்பட்டு உள்ளது.

*பெருங்களத்தூரில் கட்டட இடிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அடித்துள்ளார் த.வெ.க. வட்டச் செயலாளர்.

*திருவள்ளூரில் தொடர் கொள்ளைகள் நடத்தியதைக் கண்டுபிடிக்காத போலீஸாரைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

*கிண்டியில் செல்போன் தொலைந்து போன பெண் கொடுத்த புகாரை வாங்க மறுத்துள்ளார்கள் போலீஸார்.

*மாமல்லபுரத்தில் மது போதையில் தாயை வெட்டிய மகன்.

*திருவாரூரில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

*நெல்லையில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

*தென்காசியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

*செங்கத்தில் ஆறாவது முறையாக கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. *ஈரோட்டில் தெ.வெ.க. பேனர் விழுந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.

*சென்னையில் 61 வயதான மூதாட்டியை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் கொடுமை செய்துள்ளார்கள்.

*திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.

*மதுரையில் அழுகிய நிலையில் காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

*தூத்துக்குடியில் பெட்ரோல் பங்கை 10 பேர் கொண்ட கஞ்சா கும்பல் அடித்து சூறையாடி இருக்கிறது.

இவை அனைத்தும் பத்து நாட்களுக்குள் நடந்தவை. தூய சக்தி ஆட்சியில், உள்துறையைக் கையில் வைத்திருக்கும் விஜய் சூறையாடி வரும் காட்சிகள் இவை.

‘முப்பது நாளில் ஹிந்தி பாஷை' என்பதைப் போல, 'இருபதே நாளில் இருண்ட காலம்' என்று புத்தகம் போடத் தகுதி வாய்ந்தவர் விஜய்.

banner

Related Stories

Related Stories