முரசொலி தலையங்கம்

FCRA எனும் பாஜக-வின் கொடுங்கோல் சட்டம்.. தேசப் பாதுகாப்பைப் பற்றி யார் பேசுவது?: முரசொலி கடும் விமர்சனம்!

வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து இசுலாமியர் சொத்துகளை அடித்துப் பறிப்பது போல் கிறிஸ்தவர்களின் சொத்துகளைப் பறிக்க, FCRA என்ற சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளதாக முரசொலி விமர்சனம்.

FCRA எனும் பாஜக-வின் கொடுங்கோல் சட்டம்.. தேசப் பாதுகாப்பைப் பற்றி யார் பேசுவது?: முரசொலி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து இசுலாமியர் சொத்துகளை அடித்துப் பறிப்பது போல் இப்போது கிறிஸ்தவர்களின் சொத்துகளைப் பறிக்க, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்தச் சட்டம் ( FCRA )" என்ற சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வருகிறது.

காஷ்மீர் சிறப்புத் தகுதியைப் பறிப்பது, குடியுரிமைச் சட்டம் கொண்டு வருவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, வக்ஃப் சொத்துகளைப் பறிப்பது போன்றவைதான் பா.ஜ.க.வுக்கு விருப்பமானவை ஆகும். மற்ற எதைப் பற்றியும் இவ்வளவு ஆர்வமாகச் செய்வது இல்லை.

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்தச் சட்டமானது தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைத்து இந்த மசோதா உள்ளது. இதனால் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி குறையும். இனி இது போன்ற நிறுவனம் தொடங்குவதும் சிக்கலானது ஆகும்.

வெளிநாட்டு நிதி உதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இதனைக் கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம், தொண்டு நிறுவனங்களையே முடக்குவது ஆகும்.

அனுமதி பெறாமல் நடத்தினாலோ, அனுமதியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ வெளிநாட்டு நிதி உதவி பெறும் கட்டடங்கள் இனி அரசுக்குச் சேரும் என்று இந்தச் சட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். தொண்டு நிறுவனங்களின் உரிமம் எந்த நேரத்திலும் ஒன்றிய அரசால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட முடியும். இதன் மூலம், தொண்டு நிறுவனங்கள் நடத்திவரும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் "உரிமம் இல்லை” எனக் கூறி அதனை அரசே எடுத்து கொள்ள முடியும். இது போன்ற தொண்டு நிறுவனங்களை சிறுபான்மை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகிறார்கள். அதனால் எப்போது வேண்டுமாலும் அவர்கள் வைத்துள்ள உரிமத்தை ரத்து செய்ய முடியும்.

மதச்சிறுபான்மை அமைப்புகள், கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து மட்டுமே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் உண்மையான நோக்கம், இவர்களைக் கட்டுப்படுத்துவதுதான்.

”இந்த நிதியை வைத்து கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லி இருக்கிறார். உள்துறை அமைச்சர் பொத்தாம் பொதுவாகப் பேசக் கூடாது. அப்படி நடந்திருந்தால், அவரது உள்துறையை வைத்து கண்காணித்தாரா? அப்படி எங்கு நடந்துள்ளது, எவ்வளவு நடந்துள்ளது என்று பட்டியலிட்டுச் சொல்லி இருக்கிறாரா என்றால் இல்லை. வாய்க்கு வந்தபடி பா.ஜ.க. பாணி பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ஒன்றிய அமைச்சர்.

FCRA எனும் பாஜக-வின் கொடுங்கோல் சட்டம்.. தேசப் பாதுகாப்பைப் பற்றி யார் பேசுவது?: முரசொலி கடும் விமர்சனம்!

இது ஏதோ கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமல்ல. இது போன்ற வாய்ப்புகளின் காரணமாக உதவிகளைப் பெறும் மக்கள் அனைவருக்கும் இது எதிரானது ஆகும். அனைத்து மக்களுக்கும்தான் இந்த உதவிகள் போய்ச் சேர்கின்றன. எனவே இது அனைத்து மக்களுக்கும் எதிரான சட்டம் ஆகும். "தானும் உதவி செய்ய மாட்டேன், உதவி செய்ய முன்வருபவர்களையும் செய்ய விடமாட்டேன்” என்பது தான் ஒன்றிய அரசின் போக்கு ஆகும்.

"வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்தச் சட்டம் ( FCRA)" என்ற மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

"ஒன்றிய அரசு தனது விருப்பப்படி, எந்தவொரு முறையான சட்ட நடைமுறையும் இன்றி, ஒரு தேவாலயம், பள்ளி அல்லது மருத்துவமனை போன்ற அமைப்பின் FCRA பதிவை ரத்து செய்யவும் அதன் சொத்துக்களைக் கையகப்படுத்தவும் அதிகாரம் அளிப்பதன் மூலம், இது இந்தியாவின் தொண்டு நிறுவனங்களைச் சிதைக்க முயல்கிறது. இலாப நோக்கற்ற அமைப்புகளால் வழங்கப்படும் கல்வி, மருத்துவம் மற்றும் தொண்டு சேவைகளுக்கு மாற்றாக புதிய சேவைகளை வழங்கும் திறன் ஒன்றிய அரசிடமோ அல்லது மாநிலங்களிடமோ இல்லை. இது ஒரு ‘கொடுங்கோல் மசோதா' ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியாவிட்டால், 'தேசப் பாதுகாப்புக்கு இது அவசியம்' என்று சொல்லி திசை திருப்புவார்கள். அதையே தான் இந்தச் சட்டத்திற்கும் சொல்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியில் தேசம் எந்த வகையில் பாதுகாக்கப்படுகிறது என்பதை இந்திய நாட்டு மக்கள் அறிவார்கள்.

இந்திய எல்லைக்குள் சீனா வந்து குடியேறுகிறது. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய (இன்னும் முழுமையாக வெளியிடப்படாத) புத்தகத்தின் விவரங்கள் பெரும் விவாதப் பொருளாக உள்ளன. அந்தப் புத்தகத்தில், 2020-ஆம் ஆண்டு கைலாஷ் மலைப் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது நிலவிய அசாதாரண சூழல் விவரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள் வந்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்திய மீனவர்கள், சிங்களப் படைகளால் தாக்கப்படுவதைத் தடுக்க எந்த முயற்சியும் இல்லை. இந்தியா மீது இலங்கைக்கு எந்த பயமும் இல்லை. இந்தியாவைச் சுற்றிலும் இதுதான் நிலைமை. தேசப் பாதுகாப்பைப் பற்றி யார் பேசுவது?

FCRA எனும் பாஜக-வின் கொடுங்கோல் சட்டம்.. தேசப் பாதுகாப்பைப் பற்றி யார் பேசுவது?: முரசொலி கடும் விமர்சனம்!

எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக வெளிநாட்டுப் பங்களிப்பு திருத்த மசோதா ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் நேரம் என்பதாலும் இதனை ஒத்தி வைத்துள்ளார்கள். இக் கொடூரமான சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

banner

Related Stories

Related Stories