முரசொலி தலையங்கம்

குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!

இந்த வழக்கில் நீதிமன்றங்கள் தலையிடாவிட்டால் இருவரின் உடலோடு சேர்ந்து உண்மையும் புதைக்கப்பட்டு இருக்கும்.

குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (09-04-2026)

பழனிசாமி மறைக்க நினைத்த படுகொலை...

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த படுகொலையை மறைக்க நினைத்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. சி.பி.ஐ. எடுத்து நடத்திய வழக்கில் 9 காவலர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பைத் தந்துள்ளது.

சி.பி.ஐ. தனது விசாரணையின் போது, சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்- துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரைக் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இதில் சிறப்பு எஸ். ஐ. பால்துரை இறந்து போனார். மீதம் உள்ள 9 போலீஸாரும் குற்றவாளிகள், அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை என்று 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளித்திருக்கிறது மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

நீதிபதி ஜி.முத்துக்குமரன் அளித்த தீர்ப்பில் உள்ள சொற்கள் பதற்றம் அடைய வைக்கின்றன. “9 போலீஸ்காரர்கள் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே கொலைக் குற்றவாளிகள். ஜெயராஜ், பென்- னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் வைத்தே சாகடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவர் மீதும் பொய்வழக்குப் போட்டு கைது செய்துள்ளார்கள். இரக்கமின்றி அடித்தே கொன்றுள்ளார்கள். இந்த வழக்கில் நீதிமன்றங்கள் தலையிடாவிட்டால் இருவரின் உடலோடு சேர்ந்து உண்மையும் புதைக்கப்பட்டு இருக்கும்.

தந்தை, மகன் ஆகிய இருவரையும் சட்டவிரோதமாக அடைத்து இரவு முழுவதும் தாக்கி இருக்கிறார்கள். பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கி இருக்கிறார்கள். இனி இது போல் நடக்கக் கூடாது என்பதால் தூக்குத் தண்டனை வழங்குகிறோம்” என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.

இந்த மாபெரும் கொடூரத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டியவர் அன்றைய முதலமைச்சர் பழனிசாமிதான். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலையையே மறைக்கப் பார்த்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி.

குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!

“22.6.2028 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த . பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து சிறைக் காவலர்கள் திரு.பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு- மதித்துள்ளனர். திரு.பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் 23.6.2820 அன்று அதிகாலை சிறையில் இருந்த திரு.பென்னிக்ஸின் தந்தை திரு. ஜெயராஜ் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவம்- னையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த திரு.ஜெயராஜ் அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்” என்பதுதான் அன்றைய தினம் உள்துறையைக் கையில் வைத்திருந்த பழனிசாமி சொன்னது ஆகும்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய பிறகும் மழுப்பினார் பழனிசாமி. 'சி.பி.ஐ. விசாரணை கேட்டு நீதிமன்றத்தை தி.மு.க. நாடும்' என்று தி.மு.க. தலைவர் அவர்கள் சொன்ன பிறகுதான், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார் பழனிசாமி.

‘காவலர்கள் மீது கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது' என்று சொன்னது சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை. உயர்நீதி மன்ற நீதியரசர்களால் வரலாற்றின் முதல் முறையாக சாத்தான்குளம் காவல் நிலையம், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்டு வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களால் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டார். அவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் மிரட்டினார்கள். ‘உன்னால் ஒன்றும் . முடியாது' என்று காவலர் ஒருவர் தன்னை மிரட்டியதாக மாஜிஸ்திரேட் நீதிமன்ற பதிவாளரிடம் புகார் செய்தார்.

இரண்டு நாள் வைத்திருந்து சாகும் அளவுக்கு தாக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட இரண்டு பேரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் நீதிமன்றம், கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவ- மனை - ஆகிய அரசு எந்திரம் அனைத்தும் மறைக்கப் பார்த்தார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் அவர்கள் இருவரும் இறந்தார்கள் என்று ஜடத்தைப் போல முடிவெடுத்து அறிவித்தது பழனிசாமியின் நிர்வாகம்.

‘“... கடையை மூடச் சொன்ன எங்களை மிரட்டிய ஜெயராஜும், பென்னிக்ஸும் தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது. .” என்று முதல் தகவல் அறிக்கை எழுதியது பழனிசாமியின் போலீஸ்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர் இதனைப் பூசிமெழுகப் பார்த்தார். ‘இது லாக்அப் மரணமே அல்ல' என்று அன்றைய அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்னார். அவர்தான் இன்று கோவில்- பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சி.சி. டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. இவ்வளவும் அ.தி.மு.க. ஆட்சி மேலிடத்தின் உதவி இல்லாமல், சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது. ஊடகங்களில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியானபிறகு சி.பி.ஐ.விசாரணைக்கு ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு பழனிசாமி நெருக்கடிக்கு உள்ளானார்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் தனது கடமையைத் தவறியுள்ளார் என்றும், முறையாக அவர் பரிசோதனை செய்யவில்லை என்றும் சி.பி.ஐ. விசாரணை சொல்கிறது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தொடக்கப் பதிவேடுகள், அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள், கோவில்பட்டி சிறையில் அடைத்தபோது எழுதப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றுக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும் சி.பி.ஐ. சொன்னது. இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம் ஆகும்.

இப்படிஅ.தி.மு.க. ஆட்சியில்மூடி மறைக்கப் பார்த்த வழக்குதான் சாத்தான்குளம் வழக்கு. அதனால்தான் சி.பி.ஐ. கேட்க வேண்டிய அவசியம் அன்று ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் பிரச்சினையை கையில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை தான் வேண்டும் என்று நெருக்கடி கொடுக்காமல் போயிருந்தால், இப்படுகொலை மறைக்கப்பட்டிருக்கும். மறக்கப்பட்டு இருக்கும்.

குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது. மக்கள் மன்றம் பழனிசாமியைத் தண்டிக்கத் தயாராகி வருகிறது.

banner

Related Stories

Related Stories