முரசொலி தலையங்கம்

தென் இந்தியாவின் தலைக்குக் கீழ் தொங்கும் கத்தி - அபாய ஒலியை எழுப்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தலா 8 இடங்களை இழக்க நேரிடும்.

தென் இந்தியாவின் தலைக்குக் கீழ் தொங்கும் கத்தி - அபாய ஒலியை எழுப்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-02-2025)

மாநில மக்கள் உரிமையைக் காப்போம்!

மிக முக்கியமான அபாய ஒலியை எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்புச் செய்தால் இதன் எண்ணிக்கை 31 ஆகக் குறைந்து போகும் என்பதுதான் இந்த அபாய ஒலியாகும்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்யப் போகிறார்கள். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை முறையாகப் பின்பற்றிய மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படப் போகின்றன. அதில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தான் அதிகம். மார்ச் 5 ஆம் நாளன்று அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் கூட்டி இருக்கிறார்கள்.

எதையாவது செய்து தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்கும் செயலை தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் இவை.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பான முறையில் கடைப்பிடித்ததோடு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சிறந்த பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு. தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைக்கான மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிப்பது என்பது, நாம் அடைந்துள்ள இந்த வெற்றிக்குத் தண்டனை தரும் செயலை ஒன்றிய அரசு செய்யப் போகிறது.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 82ன்படி ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட வேண்டும்.

• 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்பட்ட பின்னர் தொகுதிக்கு சராசரியாக 7.3 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைக்கு 494 தொகுதிகள் என்று நிர்ணயிக்கப்பட்டது.

• 1961ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் தொகுதிக்கு சராசரியாக 8.4 லட்சம் மக்கள் தொகை என்கிற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு 522 தொகுதிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

• 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னர் தொகுதிக்கு சராசரியாக 18.1 லட்சம் மக்கள் தொகை என்கிற அடிப்படையில் மக்களவைக்கு 543 தொகுதிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்திய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப் பதற்கான சட்டத் திருத்தத்தை 1976ம் ஆண்டு கொண்டுவந்தது பிரதமர் இந்திரா காந்தி அரசு. இதனை அடுத்தடுத்து வந்த அரசுகள் ஏற்றுக் கொண்டன. வாஜ்பாய் தலைமையிலான அரசும் 2002 ஆம் ஆண்டு இதனை ஏற்றுக் கொண்டது. ஆனால் 2926ம் ஆண்டுக்குப் பின்னர் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று 84வது சட்டத் திருத்தம் கூறுகிறது. அதன்படி 2031 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும்.

2026ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிமறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப் பட்டால் தென்இந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதில் இருந்து 103ஆகக் குறையும்.

தற்போது மக்களவையில் 23.74 சதவீதமாக உள்ள தென் இந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97 சதவீதமாகக் குறையும் என தேர்தல் ஆணைய புள்ளி விபரங்களே தெரிவிக்கின்றன.

தென் இந்தியாவின் தலைக்குக் கீழ் தொங்கும் கத்தி - அபாய ஒலியை எழுப்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தலா 8 இடங்களை இழக்க நேரிடும். ஆந்திராவும், தெலுங்கானாவும் தலா 8 இடங்களை இழக்க நேரிடும். ஆனால் அதே நேரம் உ. பி. 11 இடங்களையும், பீகார் 18 இடங்களையும், ராஜஸ்தான் 6 இடங்களையும், மத்தியப் பிரதேசம் 4 இடங்களையும் கூடுதலாக பெறும்.

2026ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக உயர்த்தப்பட்டால், தென் இந்தியாவின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 164ஆக உயரும்.

ஆனால் பிரதிநிதித்துவத்தின் சதவீதம் தற்போது உள்ளதைவிட குறைவாக 19.34 சதவீதமாகத்தான் இருக்கும்.

உத்தரப்பிரதேசம் தற்போது 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 848ஆக உயரும்போது உத்தரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 143ஆக அதிகரிக்கும்.

பீகாரில் தற்போது உள்ள 40 இடங்கள் மொத்த எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கும்போது 79ஆக உயரும்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது உள்ள 29 என்கிற எண்ணிக்கை 848ல் 52ஆக உயரும்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக வரிப் பகிர்வு, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தென் இந்திய மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் மக்களவையில் தென் இந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவமும் அடிபட்டுப் போகும். சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியடைந்த மாநிலங்களுக்குப் பரிசாக தண்டிக்க நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் இந்தியாவின் தலைக்குக் கீழ் தொங்கும் கத்தி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எச்சரித்து வருகிறார். இதன் முனையை முறிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு.

banner

Related Stories

Related Stories