முரசொலி தலையங்கம்

“நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு - நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி” : முதலமைச்சருக்கு, முரசொலி பாராட்டு!

'நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது தமிழ்நாடு அரசு' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பாராட்டி இருக்கிறார்கள்.

“நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு - நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி” : முதலமைச்சருக்கு, முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி!

ஆறு மாத காலத்துக்குள் 6 இலட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றி இருக்கக் கூடிய நான்கு மாவட்டத்து 'பெல்ட் ஏரியா' பகுதிகளில் இருக்கக் கூடிய 32 கிலோ மீட்டரில் நெடுங்காலமாக பட்டா இல்லாமல் குடியிருப்பவர்களுக்கு நன்மை செய்யும் திட்டம் இது. சென்னையில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்குப் பகுதியில் குடியிருக்கிறார்கள். இவர்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். 1962 முதல் இருந்த இந்தப் பிரச்சினைக்கு தி.மு.க. அரசு தீர்வு கண்டுள்ளது.

இதேபோல் மதுரை, நெல்லை மாவட்டங்களில் 57 ஆயிரத்து 54 பேருக்கு பட்டா வழங்க வேண்டி உள்ளது. மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் முடிவை தமிழ்நாடு அமைச்சரவை எடுத்துள்ளது.

“நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு - நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி” : முதலமைச்சருக்கு, முரசொலி பாராட்டு!

"இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு நாங்கள் பட்டா வழங்கி இருக்கிறோம்."என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சொல்லி இருக்கிறார்.

1962 தேர்தல் அறிக்கையில்,"அரசியலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு - பொருளாதாரத் துறையில் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நிலை - எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைத்திட சமதர்மம் - சமூகத்துறையில் பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சியும் பேதமற்ற சமூக அமைப்பும் ஏற்படுத்துதல்"ஆகிய கொள்கைகளை தி.மு.க. வரையறுத்தது. இந்த அளவுகோலை செயல்படுத்தவே கழகம், ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி வருகிறது.

1971 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக 'குடியிருப்போருக்கு மனை சொந்தம்' என்ற சட்டத்தை முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார். 'தமிழ்நாடு குடியிருப்பு அனுபோகதாரர்கள் (உடைமை உரிமை வழங்கல்) சட்டம்' என்று இதற்குப் பெயர். விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்கப்பட்டன. இதன் மூலமாக குடியிருப்பு மனை பெற்றவர்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர். இதில் பட்டியலினத்தவர்கள் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 404 பேர். பிற்படுத்தப்பட்டவர்கள் - 40 ஆயிரத்து 550 பேர்.

நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக விவசாய நிலம் ஒப்படை செய்யும் திட்டத்தின் கீழ் 1996 - 2000 ஆகிய ஆண்டுகளில் 35,696 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் 52,792 பேருக்கு வழங்கியதும் கழக ஆட்சியே.

“நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு - நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி” : முதலமைச்சருக்கு, முரசொலி பாராட்டு!

அரசு புறம்போக்கு நிலங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டிக் குடியிருந்து வரும் மக்களின் இடங்களை வரைமுறைப்படுத்த ஒரு சிறப்புத் திட்டம் 2006 தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. பத்து ஆண்டுகள் என்பதை ஐந்து ஆண்டுகள் என 2008ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டுக்குள் மூன்று லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் கட்டளையிட்டார். இதன்படி கிராமப்புற மக்களுக்கான ஆண்டு வருமானம் 30 ஆயிரம் எனவும், நகர்ப்புற மக்களுக்கான ஆண்டு வருமானம் 50 ஆயிரம் எனவும் குறிக்கப்பட்டது.

கிராமப்பகுதியில் 4 சென்ட், நகராட்சியில் இரண்டரை சென்ட், மாநகராட்சியில் 2 சென்ட் வழங்கப்பட்டது. 2006-09 காலக்கட்டத்தில் மட்டும் 6.70 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் ஆதிதிராவிடர் 1,74,952 பேர். பழங்குடியினர் 13,313 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1,96,520 பேர். பிற்படுத்தப்பட்டோர் 2,54,795 பேர். ஏனையோர் 30,473 பேர்.

நிலமற்ற ஏழைவிவசாயக் குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவோம் என்று தலைவர் கலைஞர் 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார்கள். ஆட்சி அமைந்ததும் இதற்காக 26.8.2006 அன்று மூன்று அரசாணைகளை முதல்வர் கலைஞர் வெளியிட்டார்.

“நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு - நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி” : முதலமைச்சருக்கு, முரசொலி பாராட்டு!

எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லாத அரசுத் தரிசுப் புறம்போக்கு நிலங்களை ஒப்படை செய்தல், நிலமற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை ஒப்படை செய்தல், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொந்தமான தரிசு பட்டா நிலங்களை பண்படுத்துதல் - மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகச் சொல்லப்பட்டன.

நிலம் வழங்கும் முறைகளை ஆராய மேற்கு வங்க மாநிலத்துக்கு அன்றைய வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு சென்றது. நிலங்கள் எப்படி பிரித்து தரப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது. அதன்படி தமிழ்நாட்டிலும் திட்டம் வகுக்கப்பட்டது.

“நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு - நில உரிமையை நிலைநாட்டும் ஆட்சி” : முதலமைச்சருக்கு, முரசொலி பாராட்டு!

17.9.2006 அன்று முதல்வர் கலைஞர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 'தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பேரால் எத்தனையோ பணிகளை நான் தொடங்கி வைத்திருந்தாலும் இதுதான் எனக்கு நிறைவான பணி. எந்த சுயநலத்துக்காகவும் இதனை வழங்கவில்லை. இது உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக, வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்காக தரப்பட்டுள்ளது.'என்று கலைஞர் குறிப்பிட்டார். 2009 வரையில் 1,75,511 பேருக்கு 2,10,534.68 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

இந்த வரிசையில் தான் இன்றைய முதலமைச்சர் அவர்களும் பட்டா வழங்கும் முடிவை எடுத்துள்ளார்கள். இதுவரை வழங்கப்பட்ட பட்டாக்கள் 10 லட்சத்து 26 ஆயிரம். இனி வழங்க இருப்பது 6 லட்சத்து 29 ஆயிரம். ஆக மொத்தம் 16 லட்சத்து 55 ஆயிரம் பேர் பட்டாக்களைப் பெற்றிருப்பார்கள். இது மாபெரும் சாதனையாகும். நில உரிமையை நிலைநாட்டும் சாதனை ஆகும்.

'நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது தமிழ்நாடு அரசு' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பாராட்டி இருக்கிறார்கள். நீண்ட காலப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories