முரசொலி தலையங்கம்

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவிகித வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் காட்டிவிட்டார் முதலமைச்சர்.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சொன்னதைச் செய்த முதலமைச்சர் - 1

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவிகித வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் காட்டிவிட்டார் முதலமைச்சர். இது மக்கள் மனதில் மகிழ்ச்சியையும் அ.தி.மு.க. கூட்டத்துக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்று இருக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அறிவிக்கப்படாத ஒன்றிரண்டு திட்டங்களை நினைவுபடுத்தினால் கூட தவறு இல்லை.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

ஆனால், 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை' என்று திரும்பத் திரும்ப சொல்லி வந்தார். 'அனைத்து அறிவிப்புகளையும் நாங்கள் நிறைவேற்றி இருப்போம். எங்களுக்கு இரண்டு தடங்கல்கள் இருக்கின்றன. ஒன்று நிதி நெருக்கடி. மற்றொன்று ஒன்றிய அரசின் தடங்கல்கள்' என்று வெளிப்படையாகவே முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னார்கள்.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

உண்மையில் இந்த இரண்டு நெருக்கடிகள் மட்டும் இல்லாமல் இருந்தால் அனைத்து அறிவிப்புகளையும் மொத்தமாக நிறைவேற்றி முடித்திருக்க முடியும். இதுதான் முழு உண்மையாகும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருந்த மிக முக்கியமான வாக்குறுதி, குடும்பத் தலைவியர்க்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது ஆகும்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர்கள் வைத்து விட்டுப் போன கடன் தொகை என்பது மலையளவு ஆகும். இதனை வெள்ளை அறிக்கையாகவே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்தார்.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

"2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலையில் இருந்தது. அது கடந்த பத்தாண்டு காலத்தில் மந்தநிலைமையை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2013-14 ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.

2006 -13 காலக்கட்டத்தில் ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு உபரி வருவாயை அடைந்திருந்தது. 2013 முதல் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. 2017-19 காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு ஆக்கப்பட்டுவிட்டது.

2016-21 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறை விகிதம் என்பது 52.48 சதவிகிதம் ஆகும். இது முந்தைய ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 14.95 சதவிகிதமாக இருந்தது.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

அ.தி.மு.க. ஆட்சியின் உண்மையான செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றைய கடன் என்பது 5,70,189 கோடி ரூபாய் ஆக இருக்கிறது. 2010 இல் 16.68 சதவிகிதமாக இருந்த கடனை 2011 இல் 15.36 சதவிகிதமாக குறைத்தோம். ஆனால் இன்று அது 25 சதவிகிதம் ஆகிவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் தொடக்கம் முதலே கடன் வாங்குதல் அதிகம் ஆகிவிட்டது.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

* இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் தற்போது அதிகளவு கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.தொழில் வளர்ச்சியின் முன்னோடி மாநிலமாகச் சொல்லப்படுகிற மகாராஷ்டிராவில் கடன் சதவிகிதம் 16.7 ஆகவும், தொழில் வளர்ச்சியில் பழனிசாமியால் தேய்க்கப்பட்ட மாநிலமான இங்கு 24.6 சதவிகிதமாகவும் ஆகிவிட்டது.

இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் பொதுக்கடன் சுமத்தப்படுகிறது." – இதுதான் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வைத்துவிட்டுப் போன நிதிநிலை ஆகும்.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

இந்த நிதிநிலைமையை இரண்டு ஆண்டு காலத்தில் சீர்செய்து வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்கு மத்தியில் தான் எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றினார்கள். நிதிநிலைமையைக் காரணம் காட்டி மற்ற திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று முதலமைச்சர் சொல்லவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியின் நிதிச்சீரழிவை சுட்டிக் காட்டிய அறிக்கையில், "சமீபத்தில் முடிவடைந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மாற்றியமைக்கவோ அல்லது கைவிடுவதற்கோ ஒரு காரணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த அறிக்கை இல்லை" -- என்று கொட்டை எழுத்தில் 125 ஆவது பக்கத்தில் ஆறாவது, ஏழாவது, எட்டாவது வரியாக இருந்தது.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

தனது வாக்குறுதிகளை மக்களுக்கு திரும்பத் திரும்ப முதலமைச்சர் அவர்கள் தான் நினை ஆட்டிக் கொண்டே இருந்தார்கள். 'நான் மறக்க மாட்டேன்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார் முதலமைச்சர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது, பழனிசாமி செய்த தேர்தல் பிரச்சாரமே, 'பெண்களுக்கு இன்னும் 1000 ரூபாய் தரவில்லை' என்பதுதான். 'நாங்கள் தரப்போகிறோம்' என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது உடனே பதில் சொன்னார். அது பழனிசாமி கூட்டத்துக்கு பகீரென்று ஆகிவிட்டது. இதோ 1000 ரூபாய் உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டு விட்டது.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

"முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதி ஆண்டு முதல் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்" என்று நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து விட்டார்.

"ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, உயர்ந்து வரும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

வரும் ஆண்டுகளில் இத்திட்டம் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனினும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, இந்தத் திட்டத்தை வரும் நிதியாண்டில் இருந்து செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இத்தொகையைப் பெறத் தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை.. சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்”: முரசொலி பாராட்டு !

தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவுசெலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று நிதிநிலை அறிக்கை மூலமாக தெளிவுபடுத்தி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

சொன்னதைச் செய்து விட்டார் முதலமைச்சர் அவர்கள். இது மட்டுமா?

- தொடரும்

முரசொலி தலையங்கம் (21.3.2023)

banner

Related Stories

Related Stories