முரசொலி தலையங்கம்

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!

அதானி மோசடி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று பா.ஜ.க. நீங்கலான கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கூட்டுக்குழு விசாரணை வேண்டும்!

அதானி மோசடி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று பா.ஜ.க. நீங்கலான கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஐந்து நாட்களாக நாடாளுமன்றம் முடங்கி இருக்கிறது. ஆனாலும் பா.ஜ.க. அதற்கு செவிமடுக்க மறுத்து வருகிறது.

நாடாளுமன்றம் நடந்தால் அதானி மோசடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்பதால் ராகுல் காந்தி வெளிநாட்டில் போய் விமர்சித்தார் என்ற சொத்தைக் காரணத்தைக் கிளப்பி விவகாரத்தை திசை திருப்பி வருகிறது பா.ஜ.க.

‘என்னை இங்குள்ள நாடாளுமன்றத்திலேயே பேச அனுமதிப்பது இல்லை, நான் பேசியதை நீக்குகிறார்கள். இப்போதும் நாடாளுமன்றத்தில் நான் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன், என் மீதான புகாருக்கு விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று ராகுல்காந்தி அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார். அதன்பிறகும் விடவில்லை பா.ஜ.க.

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!

அதானி மோசடி விவகாரம் என்பது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது. பா.ஜ.க.வின் மோசடியை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியதைவிட தலைகுனிவு தேவையா? இதற்கு அதிகாரப்பூர்வமான பதிலை இதுவரை பா.ஜ.க. அரசு தரவில்லை.

‘’2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் ஆனது எப்படி? 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது எப்படி?

விமான நிலையம் என்றாலும் அதானிதான். துறைமுகம் என்றாலும் அதானிதான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அதானிதான். அவர் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் நஷ்டம் அடைவது இல்லையே எப்படி?

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!

என்னைச் சந்திக்கும் மக்கள் அனைவரும் அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான உறவு குஜராத் முதலமைச்சராக மோடி இருக்கும் காலத்தில் இருந்து தொடர்கிறது.

முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன. இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ்ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது.

இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாய மந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாக செல்கிறார். அங்கு மின் விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்கு பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது. அங்கிருந்து இலங்கை செல்கிறார்.

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!

ஜூன் 2022-–ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபட்சே சொன்னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக் கொள்கை” –- என்று குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வைத்து வருகிறார் ராகுல்காந்தி. அதற்கும் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் இல்லை.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அதானி விவகாரம் தொடர்பாக எந்த விளக்கத்தையும் சொல்லவில்லை. நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனாவது சொன்னாரா என்றால் அதுவும் இல்லை.

‘’அதானி விவகாரத்தில் நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையை செய்யும்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் சொன்னார். நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்பது தானே பிரச்சினையே!

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!

‘‘இந்தியாவில் உள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் அனுபவப்பூர்வமானவை. இந்த துறையில் இந்தியா நிபுணத்துவமானது. இப்போது மட்டுமல்ல. எப்போதும்தான்” என்றும் சொன்னார் நிர்மலா சீதாராமன். இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் ஏமாற்றித்தான் மோசடி நடந்துள்ளது. இதுதானே பிரச்சினையே!

மக்களவையில் அதானி குழுமம் பெற்ற கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது” என்று தெரிவித்தார். ‘’ஆர்.பி.ஐ. சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது” என்றும் கையை விரித்துள்ளார்.

“இந்தியாவை தலைகுனிய வைத்த பிரதமர் மோடி” - அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - முரசொலி!

அதாவது மூன்று விதமான பதில்களை நிதி அமைச்சர் சொன்னார். மூன்றும் இதற்கான பதில்கள் அல்ல. அதானி மோசடி செய்தாரா இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் நிதி அமைச்சர் அதற்கு பதில் சொல்லவில்லை. இரண்டு மணி நேரங்கள் நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பேசிய பிரதமரும் பதில் அளிக்க வில்லை. அப்படியானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அமைப்பதுதானே சரியாக இருக்கும்? முறையாக இருக்கும்? அதுதானே சட்டபூர்வமான நடவடிக்கையாக அமையும்.

‘அதானி விவகாரத்தில் எந்த மோசடியும் நடக்கவில்லை’ என்பதற்கான தனது தரப்பு விளக்கத்தையாவது நாடாளுமன்றத்தில் பிரதமரோ, நிதி அமைச்சரோ விரிவாக விளக்கி இருந்தாலாவது பரவாயில்லை. அதுவும் இல்லை. அப்படியானால் எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழி என்ன இருக்கிறது? நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைத் தவிர மாற்றுவழி என்ன இருக்க முடியும்?

banner

Related Stories

Related Stories