முரசொலி தலையங்கம்

கொரோனா 2வது அலை சீற்றம்: குறைகளை களைந்து மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் - முரசொலி தலையங்கம்!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருக்கின்றன. இவை வரவேற்கத் தகுந்தன. ஆனால், நம்மால் மக்களின் வாழ்வாதாரத்தை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

 கொரோனா 2வது அலை சீற்றம்: குறைகளை களைந்து மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் சில மாநிலங்களிலும், தென்னிந்திய மாநிலங்களிலும் கொரோனாவின் 2-ஆவது அலையின் சீற்றம் அதிகரித்து விட்டது. தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டன. இரவு நேர ஊரடங்கும் அமலாகும். அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகளும் அதிகமாகும் எனும் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கம் அரசு தடுப்பூசி செலுத்தி வருகிறது. மறுபக்கம் கொரோனாவின் சீற்றம் அதிகரித்து விட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது போலவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருக்கின்றன. இவை வரவேற்கத் தகுந்தன. ஆனால், நம்மால் மக்களின் வாழ்வாதாரத்தைஎண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. அதற்காக அரசு என்னசெய்யப் போகிறது. அந்தப் பிரச்சினையை எப்படி அணுகப் போகிறது என்பதுஒரு வினாக்குறியாகவே உள்ளது. இது சீரிய சிந்தனைக்குரிய பிரச்சினையாக கவனிக்கப்பட வேண்டும். அரசு எந்த நட்டத்தையும் எதிர்கொள்ளவேண்டும்.சென்னை மாநகரத்தில் நோய்த்தொற்று மிகக் கடுமையாக இருந்துவருகி றது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது போலவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருக்கின்றன. இவை வரவேற்கத் தகுந்தன. ஆனால், நம்மால் மக்களின் வாழ்வாதாரத்தை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. அதற்காக அரசு என்ன செய்யப்போகிறது. அந்தப் பிரச்சினையை எப்படி அணுகப் போகிறது என்பது ஒரு வினாக்குறியாகவே உள்ளது. இது சீரிய சிந்தனைக்குரிய பிரச்சினையாக கவனிக்கப்பட வேண்டும். அரசு எந்த நட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டும். சென்னை மாநகரத்தில் நோய்த்தொற்று மிகக் கடுமையாக இருந்து வருகிறது.

 கொரோனா 2வது அலை சீற்றம்: குறைகளை களைந்து மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் - முரசொலி தலையங்கம்!

வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்பக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் எச்சில் துப்பி அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.200, ரூ.500 என்று முறையே அபராதத் தொகை விதிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் முகக் கவசம் அணிந்தும் எச்சில் துப்பாமலும் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கொரோனா விதி மீறியவர்களாகக் கருதப்படுவார்கள். கடந்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரைஅப்படி விதி மீறியவர்களின் எண்ணிக்கை 1,36,667 பேர்.

இவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதார நெருக்கடியில் இதைச் சந்திப்பதைத் தவிர்க்கும் விதத்தில் மக்கள் நடந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம். மேலும், மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மய்யங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னையைப் பொருத்தவரை வீட்டுக்கு வீடு சோதனை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதன் மூலம் நோய்த் தொற்று இருப்பதை மக்களிடம் கண்டறிந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குச் சேர்க்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன.

அரசுப் போக்குவரத்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது என்று தடை போடப்பட்டு இருப்பதால் கூடுதலாக 400 பேருந்துகள் வழித்தடங்களில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு ஏற்பாடுகளும் நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்குத்தான். அதே வேளையில் இந்தக் காப்பதற்கான ஏற்பாடுகள் சிறு வணிகர்களை பாதிக்காத வகையில் - பல்வேறு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு கட்டுப்பாடுகள் இருப்பது அவசியமாகிறது என்று நாம் கருதுகின்றோம். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கும், எச்சில் துப்புபவர்களுக்கும் அபராதத் தொகை விதிக்கப்பட்டிருப்பது சென்னை மாநகருக்கு மட்டும்தானா, மாநிலம் தழுவிய உத்தரவா அது, என்று தெரியவில்லை.

நாம்அரசின் கட்டுப்பாடுகளை விமர்சிக்க வரவில்லை. முன்புபோல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் நமது எண்ணம். அதற்கேற்ப கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். கொரோனா 2-ஆவது அலையின் சீற்றத்தைத் தடுப்பதற்காக இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லையென்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் கொரோனாவின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். பொது மக்கள் மூன்று விஷயங்களைக் கொரோனா தொடர்பாகப் பின்பற்றினால் போதுமானது என்றே தொடக்கத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

1. வெளியில் போகும் போது ஒவ்வொரு வரும் முகக்கவசம் அணியவேண்டும்.

2. சோப்புப் போட்டுக் கைகழுவ வேண்டும்.

3. சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

பார்ப்பதற்கு படிப்பதற்கு மிக எளிதாகத் தெரியும் இந்த மூன்று விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் நடைமுறைப்படுத்துவது எளிதான செயல் அல்ல. ஆகவே தான் இம் மூன்று அம்சங்களையும் அரசும், மற்றவர்களும் திரும்பத் திரும்ப வற்புறுத்தி வருகிறார்கள். இவை கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் உபாயங்கள் ஆகும். இதுமட்டுமில்லை; தடுப்பூசிகள் கோவெக்சின், கோவி ஷீல்டு ஆகியவற்றை மக்கள் செலுத்திக் கொள்வது ஓர் இயக்கமாக இப்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட இருக்கிறது.

இதுவரை இரண்டு தவணை ஊசிகளும் செலுத்தப்பட்டு உள்ளன. ஆக, அரசு கொரோனாவின் 2ஆவது அலை சீற்றத்தை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதோடு மக்களையும் தயார்படுத்தத் தொடங்கி விட்டது. நோயின் சீற்றத்தைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் மக்களை அதனிடமிருந்து காப்பதற்கும் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆனால், அதே நேரத்தில் சின்னச் சின்ன குறைகளைக் களைந்து கொண்டே முன்னேறுவது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றே கருதுகிறோம்.

இப்போதுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு12 மணி வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. இந்தக்கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடை முறைக்கு வந்து விட்டது. இது தொடருமா? நீடிக்குமா என்பது கொரோனாவின் 2-ஆவது சீற்றத்தின் விளைவைப் பொருத்ததாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories