Corona Virus

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 9,33,434 ஆக உயர்வு! #Covid19

தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 9,33,434 ஆக உயர்வு! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த பல மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 88,538 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,05,20,126 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 2124 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,65,126 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 2,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,78,571 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 41,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,908 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories