முரசொலி தலையங்கம்

“ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம்?”: எடப்பாடி பழனிசாமியின் பொய்களை அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!

ஜெயலலிதா மீதான ஊழல் புகாரை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர் சுப்பிரமணியசுவாமி.

“ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம்?”: எடப்பாடி பழனிசாமியின் பொய்களை அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜெயலலிதாவின் மரணத்துக்கு கலைஞரும் ஸ்டாலினும்தான் காரணம் - என்று புதுக்கரடி விடத் தொடங்கி உள்ளார் பழனிசாமி. “அம்மா மீது திட்டமிட்டு பொய் வழக்குப் போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர்கள் அவர்கள்தான்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. ஒரு முதலமைச்சர் பேசும் பேச்சா இது? ஜெயலலிதா மீது முதன் முதலில் ஊழல் வழக்கை தாக்கல் செய்தவர், இன்றைக்கு மத்திய அரசை ஆளும் பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் டெல்லியில் இருக்கிறார். அவர் பெயர் சுப்பிரமணியம் சுவாமி!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். அதன் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா! நான்காண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம் என்பதை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்! இந்த வரலாறுகள் எதுவும் தெரியாமல், அல்லது தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பழனிசாமி பேசி வருகிறார்.

முதலில், இந்த வழக்கின் தன்மையே பழிவாங்கும் நோக்கத்துடன், யாரையோ உள்ளே நுழைத்த வழக்கு அல்ல. அந்த வழக்கே ஜெயலலிதா தொடர்புடையதுதான். வருமானத்துக்கு அதிகமாக 1991-96 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா பணம் சம்பாதித்தார் என்ற நேரடிக் குற்றச்சாட்டு ஜெயலலிதா மீதுதான் வைக்கப்பட்டது. அவரோடு, அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் போடப்பட்டது.

“ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம்?”: எடப்பாடி பழனிசாமியின் பொய்களை அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!

இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவுகள் 120பி மற்றும் 109இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் செய்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. பொது ஊழியரான ஜெயலலிதாவும், அவருடைய சகாக்களான மூவரும், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் புகாரை 14.6.1996 அன்று சென்னை முதன்மை செசன்ஸ் மற்றும் தனி நீதிபதி முன்னிலையில் புகாராக சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்தார். அந்தப் புகாரை வழக்காகப் பதிவு செய்து, இரண்டு மாதங்களில் அறிக்கையாக அளிக்கும்படி, மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி லத்திகா சரணுக்கு 21.6.1996 அன்று நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் தடை வாங்கினார்கள். இந்தத் தடையை 4.9.1996 அன்று உயர்நீதிமன்றம் நீக்கியது. உடனே ஜெயலலிதா, முன்ஜாமின் வழக்கு தாக்கல் செய்தார்.

அப்போது சென்னை உயர்நீதிமன்றம், “ஜெயலலிதா மீது சாட்டப்பட்ட ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அரசியல் பகை காரணமாக இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வது சரியல்ல” என்று தீர்ப்புக்கூறியது. அப்போதும் உயர்நீதிமன்றம்தான், ஜெயலலிதா மீதான புகாரை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் விசாரிக்க அனுமதி அளித்தது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்டவர்தான் மரியாதைக்குரிய நல்லம நாயுடுஅவர்கள். இதன் பிறகுதான், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் வி.சி.பெருமாள் மூலமாக 18.9.1996 அன்று ஜெயலலிதா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

subramanian swamy
subramanian swamy
twitter

இதன்பிறகு நடந்தது அனைத்தையும் நாடு அறியும். அதாவது புகாரைச் சொல்லி, அதனை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர் சுப்பிரமணியசுவாமி. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முந்திக்கொண்டு ஜெயலலிதா போனதால் மாட்டிக்கொண்டார். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் முறையாக நடக்காது என்பதால் உச்சநீதிமன்ற உத்தரவால், வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு தண்டனை தரப்பட்டது.

அங்கும் வழக்கை நடத்தியது தி.மு.க. அல்ல. நான்காண்டு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதனை எதிர்த்து கர்நாடக அரசுதான் மேல்முறையீடு செய்தது. அப்போது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று துடித்தவர், இன்றைக்கு பழனிசாமியால் ‘ஊட்டச்சத்து கொடுத்து' வளர்க்கப்படும் டாக்டர் ராமதாஸ்தான். பா.ம.க. எடுத்த முயற்சிகள் குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கமான பேட்டியைத் தந்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக ராமதாஸ் எழுதிய புத்தகமே இருக்கிறது. அ.தி.மு.க.வின் வரலாற்றை ‘கழகத்தின் கதை' என்ற தலைப்பில் ராமதாஸ் எழுதி இருக்கிறார். அதில் 255ம் பக்கத்தில் ராமதாஸ் எழுதுகிறார், “இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா நிரந்தரமாகத் தப்பிவிடும் ஆபத்து இருந்தது. இதையறிந்து அதிர்ந்த நான், எனது வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு 12.5.2015 அன்று நள்ளிரவு சென்னை திரும்பினேன். சென்னை விமான நிலையத்தில் இருந்தபடியே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினேன்.

“ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம்?”: எடப்பாடி பழனிசாமியின் பொய்களை அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!

பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் க.பாலு ஆகியோரிடம் அக்கடிதத்தை ஒப்படைத்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படியே, அடுத்த நாள் அவர்கள் பெங்களூர் சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மக்குமார், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரைச் சந்தித்து, இவ்வழக்கில் விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டியதன் தேவையை வலியுறுத்தினர்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட மூவரிடமும் நான் தொலைபேசி மூலம் பேசி, மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அந்தக் கடிதத்தில், ‘ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக அவசர அவசரமாகப் பதவியேற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு அவர் பதவியேற்றால் அது தமிழக மக்களுக்கு கணக்கிட முடியாத அளவுக்கு அநீதியையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஓயாமல் நான் விடுத்த வேண்டுகோள்களின் பயனாகச் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்படியே 23.6.2015 அன்று கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான், சசிகலாவும் அவரது கூட்டாளிகளும் இப்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்” - என்று அந்தப் புத்தகத்தில் தனக்குத் தானே புகழ் மாலை சூட்டிக்கொள்கிறார் ராமதாஸ்.

இந்த ராமதாஸுக்கு, இன்னும் கூடுதலாக 20 தொகுதிகளைக் கொடுத்து பழனிசாமி அழகு பார்த்தால் தானே, ஜெயலலிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்?

banner

Related Stories

Related Stories