மு.க.ஸ்டாலின்

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - மூவர் பலி! : முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவிப்பு!

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - மூவர் பலி! : முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அப்பகுதியில் பணியாற்றிய ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - மூவர் பலி! : முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவிப்பு!

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories