மு.க.ஸ்டாலின்

#CAA ’டிசம்பர் 23 தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணைவோம்’ - மு.க ஸ்டாலின்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டிசம்பர் 23ம் தேதி தமிழகத்தில் மாபெரும் பேரணி நடத்த தி.மு.க முடிவெடுத்துள்ளது.

#CAA ’டிசம்பர் 23 தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணைவோம்’ - மு.க ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ.க கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளது.

அகில இந்திய அளவில் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் மாணவ அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பாக இந்த விவகாரம் தொடர்பாக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

#CAA ’டிசம்பர் 23 தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணைவோம்’ - மு.க ஸ்டாலின்

அதில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் வகையில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, வருகிற டிசம்பர் 23ம் தேதி ‘குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணி’ என்ற தலைப்பில் எழுச்சி பேரணி நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் அமைதியையும், மக்களுக்கு குழி பறிக்கக் கூடியதாகவும் குடியுரிமை சட்டம் அமைந்திருக்கிறது. அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை மட்டும் விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக இந்தியாவில் குடியேறும் பிறமதத்தினரை போல இஸ்லாமியர்களை மட்டும் தவிர்த்திருப்பது ஏன்?

அ.தி.மு.க, பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால்தான், தற்போது இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் இனத்தின் துரோகிகளாக அவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். தமிழினமும், தமிழர்களும் கட்டாயம் அ.தி.மு.க, பா.ம.கவினரை மன்னிக்க மாட்டார்கள்.

#CAA ’டிசம்பர் 23 தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணைவோம்’ - மு.க ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு மோடியும், அமித்ஷாவும் என்ன கூறினாலும் அதனை கண்மூடித்தனமாக கேட்டு அடிபணிந்து, காலில் விழுந்து ஏற்றுக்கொள்பவர். ஆகையால் அவர் அப்படி சொல்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க ஆட்சியில் செய்திருக்கும் சாதனையை மக்களிடத்தில் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், விதண்டாவாதமாக தி.மு.கவுக்கு எதிராக பா.ஜ.க போராட்டம் நடத்துவது குறித்து கவலையில்லை.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தி.மு.கவின் எழுச்சி பேரணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை உள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. மக்களின் இத்தனை போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

தி.மு.கவின் அனைத்துக்கட்சி கூட்டத்தை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு அவருக்கு வேதம் ஓத வேண்டிய அவசியம் இல்லை.

#CAA ’டிசம்பர் 23 தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணைவோம்’ - மு.க ஸ்டாலின்

இந்த அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தி.மு.க கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சி சார்பற்ற முறையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும்.

அதேச்சமயத்தில் வருகிற திங்கள்கிழமை நடைபெறவுள்ள பேரணியில் கட்சிக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக இதுவரை நடிகர் ரஜினிகாந்த் எந்த கருத்தும் தெரிவிக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஊடகங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும். என்னால் பதிலளிக்க முடியாது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories