இந்தியா

ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் பளார்.. நடு ரோட்டில் அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக MLA-மும்பையில் நடந்தது?

மும்பையில் நடு ரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுநரை கன்னத்தில் பாஜக எம்.எல்.ஏ அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.

ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் பளார்.. நடு ரோட்டில் அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக MLA-மும்பையில் நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது கிழக்கு கட்கோபர் என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த சூழலில் இந்த தொகுதி எம்.எல்.ஏ-வான பராக் ஷா (Parag Shah), கடந்த 19-ம் தேதி அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலை விதிகளை மீறி வந்துள்ளார்.

அப்போது பாஜக எம்.எல்.ஏ. மற்றும் அவர் உடன் சென்றவர்கள், ஆட்டோ ஓட்டுநரை மறித்துள்ளனர். மேலும் ஓட்டுநரின் கன்னத்தில் அந்த எம்.எல்.ஏ. பளார் என்று அறைந்து, திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் பளார்.. நடு ரோட்டில் அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக MLA-மும்பையில் நடந்தது?

மேலும் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது தொடர்பாக, பாஜக எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்திருந்த நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர் சாலை விதிகளை மீறி வந்ததற்காகவே தாக்கப்பட்டார் என்று அதிகார திமிரில் பதிலளித்துள்ளனர். சாதாரண பொதுமக்களுக்கு கூட நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று பலரும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு சாலை விதிகளை மீறினால், அபராதமோ அல்லது கண்டிப்போ இருந்திருக்கலாம், இப்படி பொதுவெளியில் சாதாரண ஆட்டோ ஓட்டுநரை தாக்குவது பெரும் தவருக்குரிய குற்றம் என்று பாஜக எம்.எல்.ஏ-வை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி வருகின்றனர். எனினும் பாஜகவின் அதிகார திமிர் காரணமாக மன்னிப்பு கேட்க பாஜக எம்.எல்.ஏ. மருத்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories