இந்தியா

கேரள ஆளுநர் மாளிகையில் காவி கொடி ஏந்திய பாரதமாதா புகைப்படம் : குடியரசு தலைவருக்கு CPI கட்சி கடிதம்!

கேரள ஆளுநரை உடனடியாக திரும்ப பெற கோரி குடியரசு தலைவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

கேரள ஆளுநர் மாளிகையில் காவி கொடி ஏந்திய பாரதமாதா புகைப்படம் :  குடியரசு தலைவருக்கு CPI கட்சி கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசு, ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மேலும் தங்களது இந்துத்துவ கொள்கையை இவர்களை கொண்டு திணித்து வருகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கலத்தை கடத்தி வரும் ஆளுநர்கள், அரசு நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை போதித்து வருகிறார்கள்.

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், ஆளுநர் மாளிகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயன்படுத்தி வரும் காவி கொடி ஏந்திய பாரதமாதா புகைப்படத்தை வைத்து, அரசு நிகழ்ச்சிகளில் அந்த புகைப்படத்திற்கு மலர் தூவிய பிறகு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வருகிறார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் மரம் நடும் விழாவுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்தது. பாரதமாதா படத்துக்கு மலர்தூவிய பிறகே நிகழ்ச்சியை நடந்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த கேரள அரசு நிகழ்ச்சியை, தலைமை செயலகத்துக்கு அதிரடியாக மாற்றியது.

ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமக மாற்றி வரும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி ஏந்திய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி. சந்தோஷ் குமார், குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார், தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார், எனவே அவரை திரும்ப அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories