இந்தியா

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏன் பயப்படுகிறார்? : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி!

பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை போலிஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்  ஏன் பயப்படுகிறார்? : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் உள்ள அம்பேத்கர் விடுதி மாணவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திக்க சென்றார். அப்போது திடீரென போலிஸார் அவருக்கு அனுமதி மறுத்து மாணவர்களை சந்திக்க விடாமல் தடுக்க முயன்றனர்.

இதனால் காவல்துறைக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி நடந்து சென்றே மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

அப்போது, ”பீகார் போலிஸார் உங்களைப் பார்க்க விடாமல் என்னை தடுக்க பார்த்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. ஏன் என்றால் மாணவர்களாகிய உங்கள் சக்தி என்னைக் கண்காணித்து வருகிறது” என ராகுல் காந்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களை சந்திக்க பீகார் அரசு என்னைத் தடுப்பது ஏன்? பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏன் பயப்படுகிறார்?. மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா? என ராகுல் காந்தி தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories