இந்தியா

”சரியாக விசாரிக்கவில்லை” : குழந்தை கடத்தல் வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

குழந்தை கடத்தல் வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

”சரியாக விசாரிக்கவில்லை” : குழந்தை கடத்தல் வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச அரசுக்கும், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் வழக்கை சரியாக கையாளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் ,3 சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்து ஒருவாரத்தில் வழக்கின் விசாரணையை தொடர உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாது, நீதிபதிகள் குழந்தை கடத்தல் வழக்குகளில் நாடு முழுதும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். நிலுவையில் உள்ள குழந்தை கடத்தல் வழக்குகளை நாள் தோறும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க அந்தந்த உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

குழந்தை கடத்தல் குற்றங்கள் நடைபெற்றால் அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், தொடர் விசாரணைக்காக வழக்கு ஏப்.21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories