விளிம்புநிலை சமூக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதில் பிரதமர் மோடி எப்போது கவனத்தை திருப்புவார் என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி,”கடந்த 2024-ல் பிரதமர் மோடி “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை” திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் அறிவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதியளித்தார். இந்தத் திட்டத்தை அறிவித்து ஒரு ஆண்டு கடந்த நிலையில், பா.ஜ.க. அரசு எதையும் வரையறுக்கவில்லை . அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பத்தாயிரம் கோடிரூபாய் நிதி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு பிரதமர் மோடி வேலையின்மை குறித்து எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. கோடிக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழி, MSMEகளில் பெரிய அளவிலான முதலீடு, நியாய மான சந்தைகளாகும். இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் கோடிக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இந்த திட்டம் மற்றொரு பொய்யா?.
அதானி உள்ளிட்ட கோடீஸ்வர நண்பர்களை வளப்படுத்துவதில் இருந்து விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதில் பிரதமர் மோடி எப்போது கவனத்தை திருப்புவார்?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.