இந்தியா

நேற்று இஸ்லாமியர்கள் இன்று கிறிஸ்தவர்கள் : புனித வெள்ளி தினத்தை பணி நாளாக அறிவித்த ஒன்றிய அரசு!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் புனித வெள்ளி தினத்தை பணி நாளாக அறிவித்துள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

நேற்று இஸ்லாமியர்கள் இன்று கிறிஸ்தவர்கள் : புனித வெள்ளி தினத்தை பணி நாளாக அறிவித்த ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது மீண்டும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

அதிலும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவசர அவசரமாக நள்ளிரவு 2 மணி விரை விவாதம் நடத்தி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இம்மசோதா நிறைவேற்றிய அடுத்த நாளே கிருஸ்தவர்கள் மீது தனது தாக்குதலை தொடுந்துள்ள பாசிச பா.ஜ.க அரசு.

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் புனித வெள்ளி தினத்தை பணிநாளாக அறிவித்து, ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்லாமியர்களை அடுத்து தற்போது கிறிஸ்தவர்கள் வஞ்சிக்க பா.ஜ.க தனது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.

தாங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று பிரதமர் மோடி முதல் அமைச்சர்கள் என அனைவரும் கூறிவந்தாலும், அவர்களது ஒவ்வொரு செயல்பாடுகளும், நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்டி விடுகிறது.

”சிறுபான்மையினருக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவது மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருகிறது. வக்ஃப் மசோதாவை கொண்டுவந்து பேசும் போது சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் ஆதரவானவர்கள் என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர்களது உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது” காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories