இந்தியா

”நடுத்தர மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஒன்றிய அரசு” : நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேசியது என்ன?

அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒன்றிய அரசு இழைக்கும் துரோகம்.

”நடுத்தர மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஒன்றிய அரசு” : நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவையில் இன்று அதிகரிக்கும் பயணிகள் கூட்டம் குறைக்கப்படும் இரயில் பெட்டிகள் ஒன்றிய அரசின் நோக்கம் என்ன? என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்வினார்.

அதன் விவரம் வருமாறு:-

உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்கள் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தது, போதிய இரயில் வசதிகள் ஏற்பாடு செய்யாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானது, கோபத்தில் ரயில் பெட்டிகள் உடைக்கப்பட்டது என ரயில்வே துறையின் மிக மிக அவலமான காலமாக தற்போதைய ஒன்றிய அரசின் காலம் மாறிவருகிறது.

சிறப்பு நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும்கூட அண்மை காலமாக இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாவதால் பயணிகள் அவதியுறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒன்றிய அரசு இழைக்கும் துரோகம் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கடந்த பத்தாண்டுகளில் பொதுப்பெட்டிகள், இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை கூடிய அல்லது குறைந்த விவரங்களும் கடந்த 2024-2025 மற்றும் நடப்பு நிதியாண்டில் எத்தனை பெட்டிகள் புதிதாக உருவாக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்கிற தகவல்களையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories