'இந்தியாAI' மிஷன் மூலம் நாடு முழுவதும் எத்தனை AI தொடர்பான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் தமிழநாட்டில் AI தரவு மையங்கள் (Data center) அமைப்படுமா ? என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு
'இந்தியாAI' மிஷன்க்காக 2025-26ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடி நிதியிலிருந்து, தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள், AI தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினார்.
'இந்தியாAI' மிஷன் முன்னேற்றத்திற்காக, அரசாங்கத்தால் தனிப்பட்ட தரவு மையங்களை(Data center) அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்
அவ்வாறு இருந்தால்,தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அடித்தளத்திற்கு முக்கியமான சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஒசூர் ஆகிய இடங்களில் தரவு மையங்களை(Data center) அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
'இந்தியாAI' மிஷன் மூலம் நாடு முழுவதும் எத்தனை AI தொடர்பான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினார்.
AI தொழில்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மாநில அளவிலான திறன் மேம்பாட்டு திட்டங்கள் கல்வி நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படுமா?அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்
இந்தியாAI மிஷனின் கீழ், தமிழ்நாட்டில் வாகன தொழில் (Automobile Industry) மற்றும் சுகாதாரத் தொழில் (Healthcare Industry) ஆகிய துறைகளில் AI தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்க தேவையான திட்டங்களை அரசு பரிசீலிக்கிறதா?அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார் .