இந்தியா

”ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும்” : எச்சரிக்கும் கனிமொழி MP!

'ஒரே நாடு - ஒரே தேர்தல்' அரசியல் சாசனத்திற்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

”ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும்” : எச்சரிக்கும் கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தேர்தல் ஜனநாயகமே அழிந்துவிடும் என்பதால் ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒன்றிய பா.ஜ.க அரசு இன்று மக்களவையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 220 வாக்குகளும், எதிராக 149 வாக்குகளும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, அதனைத் தொடர்ந்து 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பத் தயார் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அறிவித்தார்.

இந்நிலையில், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' அரசியல் சாசனத்திற்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கனிமொழி,“ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. இந்த மசோதா மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒன்றிய பாஜக ஆட்சியில், ஒரு சட்டமன்றத் தேர்தலைக் கூட ஒரே நேரத்தில் நடத்த முடியாமல் பல கட்டங்களாக நடத்துகின்றனர். பிறகு எப்படி நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories