.jpg?auto=format%2Ccompress)
பாஜக ஆளும் உத்தரகாண்டின் ஹல்த்வானி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு, அவரது ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.webp?auto=format%2Ccompress)
இங்கு படிக்கும் மாணவிக்கு, அவரது வாட்சப் மற்றும் Snapchat சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டதும் அதிர்ந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தனர்.
மேலும் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த ஆசிரியரை போலீசார் தேடி வரும் நிலையில், விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.








