.jpg?auto=format%2Ccompress)
பாஜக ஆளும் உத்தரகாண்டின் காசியாபாத்தில் அமைந்துள்ள ராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஷு சவுத்ரி. இவரும் 22 வயது இளம்பெண்ணும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த சூழலில் இருவரும் காதலித்து வந்ததாகவும், விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஆக.20-ம் தேதி ஆஷு சவுத்ரி, அந்த இளம்பெண்ணை ரிஷிகேஷுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது இருவரும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கே வைத்து அந்த இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் ஆஷு சவுத்ரி. அதுமட்டுமின்றி, காசியாபாத்திற்குத் திரும்பும் போது ஆஷு, தனது நண்பர்களான ஆதித்யா கபூர், யாஷ் அவுஜல் மற்றும் முஸ்தபா ஆகிய 3 பேரை அழைத்து அனைவரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து கடினப்பட்டு வீடு திரும்பிய அந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார். இதையடுத்து ஆக 21-ம் தேதி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பெண்ணின் உடலில் 8 பகுதிகளில் கடித்த தடங்களும், பல காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளான ஆஷு சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் ஆதித்யா கபூர், யாஷ் அவுஜல் மற்றும் முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது.








