அரசியல்

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”

சென்னை வானகரத்தில் இன்று (ஜூன் 28) கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியினர் 5000 பேர் திமுக-வில் இணையும் விழா நடைபெற்றது

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை, வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 28) திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியினர் 5,000 பேர் திமுக-வில் இணையும் விழா நடைபெற்றது.

ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் முன்னிலையில் திமுக உறுப்பினராக தன்னை சேர்த்துக்கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின், இன்று மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் தங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கழக முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். மாற்றுக் கட்சியினர் உற்சாகத்துடன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை வரவேற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”

ஆளும் கட்சியை நோக்கி குதிரை பேரம் நடத்தி பல்வேறு எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதிவியைத் துறந்து பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சென்றாலும், என்றும் கழகத்தையும் மக்களுக்காக உழைக்கும் திமுக என்ற இயக்கத்தை நம்பியும் மாற்றுக் கட்சியினர் இணைந்து வருகின்றனர்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கழகம் என்றுமே மக்களுக்காக இயங்கக் கூடியது என்பது இது போன்ற நிகழ்வுகளால் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக் கொண்டே உள்ளது.

banner

Related Stories

Related Stories