முரசொலி தலையங்கம்

தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!

இப்போது தமிழ்த்தாயையே ஏமாற்றுகிறார்கள். உண்மையில் முதலமைச்சர் விஜய்யின் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும்.

தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியாக மனிதனையே கடிக்கலாமா?’- என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல விவசாயிகளை ஏமாற்றினார்கள். அடுத்து மக்களையே ஏமாற்றினார்கள்.

இப்போது தமிழ்த்தாயையே ஏமாற்றுகிறார்கள். உண்மையில் முதலமைச்சர் விஜய்யின் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும். கூச்சமே இல்லாமல் பொய்களையும் அநியாயங்களையும் செய்வது முதலமைச்சர் விஜய்யின் பாணியாக இருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்துள்ளார்.“தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது”என்பதுதான் அந்தத் தனித்தீர்மானம் ஆகும். இதனை திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு ஆதரித்துள்ளார்கள்.

இப்படி ஒரு தனித்தீர்மானம் கொண்டு வர என்ன காரணம்? முதலமைச்சர் விஜய்க்கு இருக்கும் குற்றவுணர்ச்சிதான் முதல் காரணம் ஆகும்.

தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!

அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழை மூன்றாவது இடத்துக்கு தள்ளி வைத்து தனது பதவியேற்பு விழாவை நடத்தினார் விஜய், அளுநரின் அஜெண்டாவுக்கு விஜய் தலையாட்டினார்.

அதே போலத் தான் தனது உரைக்கு முன்னதாக தேசியகீதம் பாடப்பட வேண்டும் என்ற ஆளுநர் மாளிகையின் கோரிக்கைக்கும் அடிபணிந்து விட்டார்கள். சபையில் ஆளுநர் உரையாற்றும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இப்படி ஓட்டுமொத்தமாக ஆளுநர் ஆசைக்கு இணங்கி விட்டு, இப்போது தமிழ்த்தாயைக் காப்பாற்றுவது போல நடிக்கிறது த.வெ.க. அரசு.

தமிழ்த்தாய் வாழ்த்தை ஒங்கி ஒலிக்க வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 56 ஆண்டுகளுக்கு முன்பே இதனைச் செய்து விட்டார்.

11.3.1970 ஆம் நாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பொது நிறு வனங்கள், நிகழ்ச்சிகளில் முதலில் பாட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டார்கள். அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து இன்று வரை ஒலித்து வருகிறது.

தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!

12.12.2021 ஆம் நாள் முதலமைச்சராக இருந்த திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்தினார்

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அரசாணை (நிலை) எண். 1037. பொதுத் (பொது----1) துறை, நாள். 17.12.2021.

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது. இப்பாடல் 55 வினாடிகளில் முல்லைப் பாணியில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும். தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள். பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைவட்டுகளைக் கொண்டு இசைக்கப்படு வதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும். அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு

சேர்ப்பதிலும், தனியார் அமைப்புகளும் பொதுமக்களும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கியம். பொதுநிகழ்வுகள் ஆகியவற்றின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எனவே அனைத்தும் அரசாணைகளாக இருக்கிறது. த.வெ.க. அரசுக்குதுணிச்சல் இருந்தால் இதனை சட்டம் ஆக்குங்கள். ஆளுநருக்கு அனுப்புங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அனுப்புங்கள். அதை விட்டுவிட்டு தனித்தீர்மானம் போடுவதால் என்ன பயன்?

தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடுங்கள் என்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேசிய கீதம் பாடுங்கள் என்கிறார் ஆளுநர். பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களை மன்னர்களாக நினைத்துக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக தள்ளிவைக்கும் அளவுக்கு துணிச்சலைப் பெற்றுவிட்டார்கள். இவற்றை எல்லாம் த.வெ.க. அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்ய முடியாது.

தனித்தீர்மானத்தின் போது உரையாற்றிய சபாநாயகர், “யாருக்கும் அனுப்பி அனுமதி கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை” என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியானால் இந்த தனித்தீர்மானம் எதற்காக நிறைவேற்றப்படுகிறது? அரசே வைத்துக் கொள்வதற்கு எதற்காக தனித்தீர்மானம்?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து சர்ச்சை எழுப்புவது ஆளுநர் மாளிகை. அவர்களுக்கு இந்த தனித்தீர்மானம் அனுப்பி வைக்கப்பட வேண்டாமா? அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டாமா?

தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்?

banner

Related Stories

Related Stories