இந்தியா

57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல்... எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!

57 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஜூன் 1) இறுதிக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல்... எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறும்; ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல்... எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!

இந்த சூழலில் 7-ம் கட்டமான இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்றுடன் (மே 30) தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. 7-ம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு :

  • உத்தர பிரதேசம் - 13

  • பஞ்சாப் - 13

  • பீகார் - 8

  • மேற்கு வங்கம் - 9

  • சண்டிகர் - 1

  • ஹிமாச்சல பிரதேசம் - 4

  • ஒடிசா - 6

  • ஜார்க்கண்ட் - 3

banner

Related Stories

Related Stories